
சென்னை, பிப்.7: தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மனைகள் ஒதுக்கீட்டில் விருப்புரிமையின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறப்படுவது தொடர்பாக, முதல்வர் கருணாநிதி மீது வழக்குத் தொடர ஆளுநரிடம் வெளிநாட்டு உளவாளியாக நம்பப்படும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அனுமதி கோரியுள்ளார். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் உருவாக்கப்படும் மனைகள் மற்றும் வீடுகளை அரசின் விருப்புரிமைப் பிரிவின்கீழ் ஒதுக்கீடு செய்ததில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றதாக ஊடகங்கள் மூலமாகத் தெரியவந்துள்ளது. விதிகளுக்கு உட்பட்டு உரிய நபர்களுக்கு ஒதுக்கீடு செய்யாமல், அதிகாரத்தில் உள்ளவர்களில் வேண்டியவர்களுக்கும், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர அனுமதி கேட்டு ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment