புதுடெல்லி,பிப்.5:'தடைச் செய்யப்பட்ட இயக்கங்களில் உறுப்பினராக இருக்கின்றார் என்பதற்காக மட்டும் ஒருவரை குற்றவாளியாக கருத இயலாது' என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தாக்குதல் சம்பவங்களிலோ, தாக்குதல் நடத்த தூண்டுவதிலோ ஒருவர் ஈடுபடும் வரை அவரை குற்றவாளியாக கருதமுடியாது என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. தடைச் செய்யப்பட்ட இயக்கமான உல்ஃபாவின் உறுப்பினர் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட அருப் புயான் என்பவர் தனக்கு தண்டனை வழங்கிய குவஹாத்தி தடா நீதிமன்றத்தின் தீர்ப்பைக் குறித்து கேள்வி எழுப்பி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில்தான் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.
வலுவான ஆதாரங்கள் இல்லாதபொழுது போலீஸாரிடம் அளிக்கப்பட்டதாக கூறப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஆதாரம் இல்லை என நீதிமன்றம் தெரிவித்தது.
ஐ.பி.சி.சி பிரிவு 3(5) பரிசீலிக்கப்படும் பொழுது அதன் பொருள் புரியாவிட்டால் கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்துதல் (பிரிவு 19(9)), சுதந்திரம் (பிரிவு 21) ஆகிய அடிப்படை உரிமைகள் மீறப்படும் என நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, ஞானசுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கூறியது. மாவோயிஸ்டுகளுக்கு உதவினார் என மனித உரிமை ஆர்வலரும், டாக்டருமான விநாயக் சென்னுக்கு அண்மையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில்,உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கூறிய கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment