Feb 9, 2011
சேவல் தாக்கியதில் வாலிபர் பலி!!!
கலிபோர்னியா, பிப். 9; அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சேவல் சண்டை பிரசித்திப் பெற்றது. இங்கு சேவல்களின் கால்களில் கத்தியை கட்டி வைத்து சண்டையிட விடுவார்கள். இதில் எந்த சேவல் வெற்றி பெறும் என பணம் கட்டி சூதாட்டம் நடத்தப்படுகிறது. அது போன்று கலிபோர்னியாவில் உள்ள துலார் என்ற இடத்தில் நடந்த சேவல் சண்டையை ஜோஸ் லூயிஸ் ஒகாவோ (35) என்ற வாலிபர் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, ஆக்ரோஷமாக சண்டையிட்ட ஒரு சேவல் வேடிக்கைபார்த்து கொண்டிருந்த ஒகாவோவின் பின்புற காலில் தாக்கியது. இதில் சேவலின் காலில் கட்டியிருந்த கத்தி தாக்கி நரம்பு துண்டானது. இதனால் ரத்தம் கொட்டியது. உடனே அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். அவர் கலிபோர்னியாவில் உள்ள லாமந்த் என்ற இடத்த சேர்ந்தவர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment