இலங்கை, பிப்.22: பார்வதி அம்மாள் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காகச் சென்ற திருமாவளவன் திருப்பி அனுப்பப்பட்டார். நேற்று முன்தினம் பிப்.20ம் தேதி மரணமடைந்த விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார். அதன்படி இலங்கை சென்ற அவரை இலங்கை அதிகாரிகள் இலங்கைக்குள் நுழைய அனுமதிக்க வில்லை. வேறு வழியின்றி அவர் தான் சென்ற விமானத்திலேயே மீண்டும் சென்னைக்குத் திரும்பினார்.
சிந்திக்கவும்: இறுதி சடங்குக்கு போக அனுமதி மறுத்ததன் மூலம் இலங்கை தனது பாசிச பயங்கரவாத சிந்தனையை மீண்டும் உலகுக்கு எடுத்துக் காட்டி உள்ளது. இறுதி ஊர்வலங்களில் அரசியல் தலைவர்கள் கலந்து கொள்வது உலக நாடுகளில் நடைமுறையில் உள்ள ஒன்று தான். தொல். திருமாவளவனை தடுத்தான் மூலம் இலங்கை அரசு தனது சர்வாதிகார, பயங்கரவாத முகத்தை உலகிற்கு மீண்டும் அடையாளம் காட்டி உள்ளது. இலங்கையில் மக்களாட்சி நடக்கவில்லை சர்வாதிகாரி, பயங்கரவாதி அதிபராக இருக்கிறார் என்பதை இந்த நிகழ்வு தெளிவு படுத்தி உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
ஒருவரின் மரணத்திற்குக் கூட வரவிடாத சிங்கள இனம் எப்படிப்பட்ட பயங்கரவாத கும்பல் என்பதை இனியாவது உலகம் புரிந்து கொள்ளட்டும்.
Post a Comment