ஹிந்து நாளேடு நடுநிலை நாளேடு என்றும்,ஆசிரியர் இராம் மூத்த ஊடகவியலாளர், என்று இந்து நாளேட்டின் புராணம்பாடும் நம் அறிவு ஜீவிகள் முதலில் தெரிந்து கொள்ளுங்கள். ஹிந்து பத்திரிக்கையின் பத்திரிக்கை தருமம் என்றால் என்ன? அதன் நடுநிலை என்பது இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரம் என்பதையும், பாசிச ஹிந்து பயங்கரவாத அமைப்புகளையும் அதன் வர்ணாசிரம கொள்கைகளுக்கும் ஆதரவாக இது செயல்பட தவறியது இல்லை என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். தமிழ்நாட்டின் ஆன்மீக குருக்கள் முதல் வங்காளத்தில் உள்ள தனது விருப்பமிகு மார்க்சிசுட்டுகள் வரை சிலரின் கிரிமினல் குற்றங்கள் முதல் படுகொலைகள் வரை திரு.இராமின் தலைமையில் இயங்கும் ஊடகம் வெளியிடுவதில்லை, மாறாக முழுவதுமாக மூடி மறைத்து, பொய்யான தகவல்களை பரப்புவதிலேயே குறியாக இருக்கின்றது. எல்லா தீவிரவாத தாக்குதல்களையும் இசுலாமிய சமூகமே நடத்துகின்றது என்று இந்திய உளவுத்துறை கூறும் பச்சைப் பொய்களை கண்ணை மூடிக்கொண்டு அப்படியே கிளிப்பிள்ளை போல ஒப்புவித்து வருகின்றது இந்து நாளேடு.
மேலும் ஹிந்து தீவிரவாதம் குறித்தோ, ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் ஆன அத்வானி முதல் மோடிவரை நடாத்திய கலவரங்கள் குறித்தோ, இப்பொது குண்டுவிடிப்புகளில் சிக்கி இருக்கும் ஹிந்து தீவிரவாதிகள் பற்றியோ, அவர்களது பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பு இருந்து செயல்பட்டது என்பது பற்றியோ ஹிந்து, தினமலர், தினமணி, போன்ற பத்திரிக்கைகள் இந்த செய்திகளை வெளியிடாமல் தொடர்ந்து இருட்டடிப்பு செய்து மவுனம் காத்து வருகின்றன. இந்தியாவில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளை திட்ட மிட்டு நடாத்திய நாசகார ஆர் எஸ் எஸ் தீவிரவாத அமைப்பு பற்றி எழுதாத பேசாத எந்த ஒரு பத்திரிக்கையும், எந்த ஒரு அரசியல்வாதியும், இவர்கள் எல்லாம் ஹிந்துத்துவா தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் என்று நம்மால் சொல்ல பகிரங்கமாக சொல்ல முடியும்.
நன்றி : வினவு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment