![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-u3jCpcACwAGz9eApn7_3nR7rf7MN1EZ9MIbV3N1piC5u4Jlw8pEduQ8HS3nN3hPAUk1L2-Z2rV2-SBIdcLtoIxhWcZjNWYws2iOCSGTMJTRIGkNZ31UWF9D8VMrMNiwS4vlHTf1uVLU/s320/3696853967_dfcdf6090e.jpg)
சென்னை : இந்திய அறிவியல் காங்கிரசின் 98வது மாநாட்டை நாளை துவக்கி வைக்க, பிரதமர் மன்மோகன் சிங் இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார். பிரதமர் வருகைக்காக, சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பிரதமரின் பாதுகாப்பு தொடர்பாக அதிகாரிகள் டில்லியில் இருந்து சென்னை வந்துள்ளனர். இவர்கள் விழா நடக்கும் இடத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டு, பாதுகாப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.
விமான நிலையம் முதல் கிண்டி ராஜ்பவன் வரை உள்ள அனைத்து பகுதிகளும், இன்று காலை முதல் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படுகின்றன. பாதுகாப்பு பணிக்காக 5,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.பிரதமர் கார் செல்லும் இடங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை, சென்னை நகர கமிஷனர் ராஜேந்திரன் தலைமையிலும், விழா நடக்கும் இடம், பிரதமர் வருகை, புறப்பாடு போன்ற இடங்களில் புறநகர் கமிஷனர் ஜாங்கிட் தலைமையிலும் போலீசார் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.கடலோர பகுதிகள் அனைத்தும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், பிரதமர் கார் செல்லும் பாதையில், முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
சிந்திக்க : மக்கள் அத்தியாவாசிய பொருட்களின் விலை உயர்வால் தவிக்கிறார்கள் இவர்கள் என்ன வென்றால் அறிவியல் மாநாடு நடத்துகிறார்கள். வெங்காயத்திற்கு முதலில் பதில் சொல்லுங்கள். மக்கள் உயிர் வாழ வழியில்லை இவர்களுக்கு பாதுகாப்புக்கு மட்டும் குறைவில்லை.
1 comment:
சரியா சொன்னிங்க
இதையம் கொஞ்சம் பாருங்க
http://singhisnotking.blogspot.com/2011/01/1.html
Post a Comment