![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-Ie644fG6UjRyTs3q_SoZKDO1jnptUaxm72BIim9cpDjC1UBPc0L5wif3QQazwOZenvflZOJdzuXNwbsLcqOv7GMNMnRL4jUn7_Cz1wEMvmLp3QpLPuUAI7Ux3lNVOTNbgtEHm9V_sng/s320/gaza_flotilla_ship_2.jpg)
அதேவேளையில் ஈரான், ஜோர்டான் ஆகிய நாடுகளிலிருந்து வந்த 45 பேர்களுக்கு எகிப்து அனுமதி மறுத்தது. ஈரான் வழங்கிய 10 ஜெனரேட்டர்கள் உள்பட சில சரக்குகளை காஸ்ஸாவிற்கு கொண்டுச் செல்லவும் எகிப்து அனுமதி மறுத்தது. 'ஏசியா டு காஸ்ஸா காரவான்' என்ற நிவாரணக் குழுவில் இந்தியா, ஈரான், ஜப்பான், இந்தோனேஷியா, பாகிஸ்தான், மலேசியா, நியூசிலாந்து, குவைத் உள்பட 15 ஆசிய நாடுகளைச் சார்ந்த பிரதிநிதிகள் அடங்கியுள்ளனர். டிசம்பர் 27 ஆம் தேதி காஸ்ஸாவிற்குள் நுழைய ஏற்கனவே இக்குழு திட்டமிட்டிருந்தது. புதுடெல்லியிலிருந்து கடந்த ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி புறப்பட்ட இக்குழு தற்பொழுது சிரியாவில் உள்ளது.
No comments:
Post a Comment