![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihKjpoipWGGqHf-HYJBMnG6RSxFyG4Tw-imjc9xsH3x-7UoL0L7cJK4-5BMo8K7TnLSRLJd-GDyIkG_n2hMISAp-bFgKV38zgoJ9dWTaPu-Xl1dWY3oeg5eMqzIw1tPRhUfqM_ZjNKwKU/s320/aircraft_crashes.jpg)
ரஷியாவின் கோகலி மாவியா ஏர்லைன்' என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் சைபீரியாவின் சர்கட் நகர் விமான நிலையத்தில் இருந்து மாஸ்கோவுக்கு இன்று புறப்பட்டது. அதில் 124 பயணிகள் இருந்தனர். விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் மீண்டும் தரை இறங்கியது. அப்போது சைபீரியாவின் சர்கட் விமான நிலையத்தின் ஓடுதளத்தில் பனி படர்ந்து கிடந்தது. இதனால் நிலை குலைந்த விமானம் ஓடுதளத்தை விட்டு விலகி ஓடி வெடித்து சிதறியது. முன்னதாக விமானம் தரையில் விழுந்து ஓடு தளத்தில் ஓடி வெடிக்கும் முன்பே மீட்பு படையினர் விரைந்து வந்தனர். தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டு விமானத்தில் இருந்த பெரும்பாலான பயணிகளை மீட்டனர். ஆனால் 3 பேர் மட்டும் உயிரிழந்தனர். மேலும் 43 பயணிகள் காயம் அடைந்தனர்.
No comments:
Post a Comment