Jan 28, 2011

இதுதான் கண்டதும் காதலோ!!!


பொதுவாக ஆண்கள் தமக்கு பிடித்தமான பெண்களிடம் காதலை தனிமையிலேயே வெளிப்படுத்துவார்கள். ஆனால், விமானப்பணிப் பெண்ணான தனது காதலியிடம் ஆடவர் ஒருவர் தன் காதலை விமானப் பயணத்தின் இடை நடுவே அதுவும் சக பயணிகளின் முன்னே வெளிப்படுத்தியமையானது அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது. லிஸ்பன் நகரிலிருந்து பார்சிலோனா நோக்கிப் பயணித்த விமானத்தில் பணிப்பெண்ணாக பணிபுரியும் வெரா சில்வா(29) என்ற அப்பெண் வழமை போல தனது கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். இதன்போது ஜொஜாஹோ வியரா(35) என்ற நபர் சக பணிப்பெண்களின் உதவியுடன் விமானத்தில் ஒலிபரப்புக்கருவிகளின் மூலம் தனது காதலை முன்மொழிந்துள்ளார். இதன்போது விமானத்தில் இருந்துள்ள பயணிகளின் எண்ணிக்கை 35 ஆகும். இதனைச் சற்றும் எதிர்ப்பார்க்காத அப்பெண் வெட்கத்தில் செய்வதறியாது விழித்துள்ளார்.எனினும் பின்னர் அவர் தன்னைத் தேற்றியவாறு காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். அதனை வரவேற்ற பயணிகள் கரகோஷத்துடன் இதனைக் கொண்டாடியுள்ளனர்.

2 comments:

MANO நாஞ்சில் மனோ said...

சூப்பரான முயற்ச்சியா இருக்கே.....!!!
நானும் கல்ஃப் ஏர்வேசில் முயற்ச்சி பண்றேன்..........

ADMIN said...

வித்தியாசமாக இருக்கிறது.. ! எப்படியெல்லாம் காதலை வெளிப்படுத்துகிறார்கள் மனிதர்கள்?