Jan 24, 2011

இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு புகழ் பெற்ற 'க்ரிஸ்டல்' விருது.

சுவிட்சர்லாந்தின் தாவோஸ் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொள்ள உள்ளார். கலை மற்றும் இசையில் அவர் புரிந்த சாதனைகளுக்காக அங்கு அவருக்கு 'க்ரிஸ்டல்' விருது வழங்கப்பட உள்ளது. உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் 11 நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், கலைஞர்கள், மதத் தலைவர்கள் உள்ளிட்ட 2500க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள உள்ளனர். இந்த மாநாட்டில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப்பணியைப் பாராட்டி உலகப் பொருளாதார மன்றத்தின் உயரிய விருதான 'க்ரிஸ்டல்' விருது வழங்கப்படுகிறது. ஜனவரி 26-ம் தேதியில் இருந்து 5 நாட்கள் அந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

No comments: