சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நாளை 50 ஆயிரம் இடங்களில் வெளியிடப்படுகிறது. புதிதாக 13 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார். தமிழகம் முழுவதும¢ ஜனவரி 1ம் தேதியை தகுதி அடிப்படை நாளாகக் கொண்டு 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்டோபர் 25ம் தேதி வெளியிடப்பட்டது. அந்த பட்டியலில் பெயர் சேர்ப்பு, பெயர் திருத்தம், முகவரி மாற்றம் போன்றவை இருந்தால், அவற்றிற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நவம்பர் 13ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அலுவலகம் அறிவித்தது. இதற்காக தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்ட பள்ளிகள், அரசு அலுவலகங்களில் இந்த முகாம்கள் நடந்தன. இங்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வழங்கப்பட்டதுடன், புதிய விண்ணப்பங்களும் பெறப்பட்டன. இதில் ஏராளமானோர் பெயர் திருத்தம், முகவரி மாற்றம், பெயர் சேர்ப்பிற்கான விண்ணப்பங்களை வழங்கினர்.தமிழகம் முழுவதும் 234 சட்டசபை தொகுதிகளிலும் நாளை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

No comments:
Post a Comment