Jan 25, 2011

இந்திய குடியரசு தினமா? ஈழ தமிழர்களின் குடி கவிழ்ப்பு தினமா?

சிந்தனை 1). அன்புள்ள தமிழக சொந்தங்களே இந்த குடியரசு தினத்தில் நாம் எடுத்து கொள்ள வேண்டிய மிக ஒரு முக்கியமான சூளுரை இருக்கிறது. அது என்னவென்றால்? மத மாச்சாரியங்களை ஒழிப்பது,தமிழ் ஈழத்திற்க்கும் ,காஷ்மீருக்கும் சுதந்திரம் கிடைக்க பாடுபடுவது. மதம் மற்றும் இனத்தால் நாம் வேறுபட்டவர்களாக இருந்தாலும் மொழியால் நாம் தமிழர்கள் என்ற ஒற்றுமை உணர்வோடு வாழவேண்டும். மத துவேசங்களை பரப்பும் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பின் சூழ்ச்சிகளில் சிக்கிவிடமால் நாம் என்றும் ஒற்றுமையுடன் வாழவேண்டும். ஹிந்து, முஸ்லிம், கிருஸ்தவர்கள், மற்றும் இன்னபிற மக்களும் உடன் பிறப்புகளே. நம் அனைவரும் சகோதர சிந்தனையோடு செயல்பட்டு வட நாட்டில் தலைவிரித்தாடும் மத கலவரங்களை தமிழகத்தில் நுழையவிடாமல் தடுக்கவேண்டும்.
சிந்தனை 2). உண்மையான குடியரசு தினம் என்பது என்ன?. மற்றைய குடியரசுகளை கவிழ்த்துவிட்டு கொண்டாடுவதா? எமது தொப்புள் கொடி உறவுகளான ஈழ தமிழர்களுக்கு என்று? தனி நாடு அமைகிறதோ, அதுபோல் என்று? காஸ்மீர் மக்களின் விடுதலை உறுதி செய்யபடுகிறதோ அன்றுதான் உண்மையான குடியரசுதினம், உண்மையான சுதந்திரதினம் ஆகும். ஆறுஅரை கோடி மக்களின் உணர்வுகளை கொன்று விட்டு அவர்களின் தொப்புள் கொடி உறவுகளை கொன்று குவிக்க ஆயூதம் கொடுத்து உதவி விட்டு? போலியான குடியரசுதின கொண்டாட்டங்கள் எதற்கு?. ஈழ தமிழர்களின் குடியரசை அழித்து, சொந்தமண்ணின் மைந்தர்களை காட்டு வேட்டை என்ற பெயரில் கொன்று குவித்து, கஷ்மீர் மன்னரோடு நேரு செய்த ஒரு ஒப்பந்தத்தை வைத்துகொண்டு இன்று வரை அம்மக்களை அடிமைபடுத்தி வைத்திருப்பது, இதை எல்லாம் செய்து கொண்டு குடியரசுதின கொண்டாட்டமா?. சுதந்திரத்தை, குடியரசை பத்தி பேச நமக்கு என்ன அருகதை இருக்கிறது. வெள்ளையர்களிடம் இருந்து நாம் பெற்ற சுதந்திரத்தை கொண்டாட குடியரசுதினம் என்றால்? இதே சுதந்திரத்தை கேட்டுதானே ஈழ மக்களும், கஷ்மீர் மக்களும் போராடுகிறார்கள். அவர்களுக்கு சுதந்திரம் கொடுக்க, அவர்களும் ஒரு குடியரசை அமைக்க ஏன்? நமக்கு பொறுக்கவில்லை. காஷ்மீர் நம்மோடு சேர்த்து வைத்து கொள்ளப்பட்ட நாடுதானே! இலங்கைதீவின் பூர்வாங்க குடிமக்கள் தமிழர்கள் தானே! சிங்களவர்கள் வந்தேறிகள் தானே! அவர்களது சுதந்திர போராட்டத்தை நாம் ஏன்? நசுக்க உதவ வேண்டும். அவர்கள் அமைத்திருந்த குடியரசை நாம் ஏன்? அழிக்க உதவி செய்யவேண்டும். காஷ்மீர் மக்களுக்கு ஏன் சுதந்திரம் கொடுக்கமாட்டேன் என்று மறுக்க வேண்டும். நடுநிலையோடு நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

இந்திரா காந்தி அம்மையார் மரணிப்பதற்கு முன்னாள் 'தனது கடைசி பாராளுமன்ற உரையில்' இலங்கையின் பூர்வீக குடிமக்கள் 'தமிழர்கள்' என்று சென்னார்களே, தமிழர் விடுதலைக்கு 'ஆயூத பயிற்சி' கொடுத்தார்களே! எம். ஜி. ஆர். கோடி கணக்கில் பணவுதவி புரிந்தாரே! அப்படியிருக்க அந்த மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கவிடாமல் செய்து விட்டு குடியரசுதினத்தை பற்றி பேச,கொண்டாட என்ன? உரிமை இருக்கிறது, என்ன? யோக்கிதை இருக்கிறது நமக்கு. உண்மையிலேயே நாம் வெள்ளையனிடம் இருந்து பெற்ற சுதந்திரத்தை கொண்டாட உரிமை பெற்றவர்கள் என்றால்? இலங்கையின் பூரண குடிகளான தமிழர்களின் சுதந்திரதின, குடியரசு தினத்தை உறுதி செய்துவிட்டு நாம் கொண்டாடுவோம். நம்மிடம் அபயம் தேடிவந்த கஷ்மீர் நாட்டை நாமும், பாகிஸ்தானும் கூறு போட்டு வைத்துள்ளோமே! அதை கொடுத்துவிட்டு குடியரசு தினம் கொண்டாடுவோம். அதைவிட்டு விட்டு நமக்கு சுதந்திர தினத்தை, குடியரசு தினத்தை கொண்டாடும் எந்த உரிமையும், நியாயமும், யோக்கிதையும் நமக்கு இல்லை. நமக்கு ஒரு நீதி அடுத்தவர்களுக்கு ஒரு நீதியா? நடுநிலையோடு சிந்திக்கவும்.

அன்புடன்: ஆசிரியர்: புதியதென்றல் - சிந்திக்கவும். நெட்.

No comments: