Jan 19, 2011

பெரியார், அண்ணா சிந்தனை வழியில் தனி தமிழ் நாடு.

பெரியார் தனி தமிழ் நட்டு வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தமிழர்கள் ஒரு நாளும் மத்தியை ஆளும் ஹிந்தி அரசோடு சேர்ந்திருக்க முடியாது என்பதை தெளிவாக அறிந்திருந்தார். அதனாலே அவருக்கு தமிழ் மாநில முதல்வர் பதவிக்கு வருவதில் தேர்தலில் நிற்பதில் உடன்பாடு இருக்கவில்லை. இதனாலேயே அண்ணா தி.க. வில் இருந்து தி.மு.க. என்ற கட்சியை உருவாக்கி தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்றதும் பெரியாரை வந்து முதல்வர் பதவியில் அமரும்படி கேட்டு கொண்டார். ஆனால் பெரியார் அந்த வேண்டுகோளை மறுத்துவிட்டார்.

பெரியார், திராவிட நாடு என்று சென்னை மாகாணத்தை தலைநகராக கொண்ட தமிழகத்தை சொன்னார். ஆனால் அண்ணா நான்கு நாடுகளின் கூட்டு அரசே, திராவிட நாடு என்று சொன்னார். அண்ணாகூட பிரிந்து செல்லும் உரிமையோடு கூடிய தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய நாடுகளின் கூட்டு அரசாகத் தான் திராவிட நாட்டை கூறினார். மொழி வழி பிரிந்தும், இன வழி கூடியும் உள்ள நாடாகத்தான் திராவிட நாட்டை கூறினார். முப்பது மாநிலங்கள் கொண்ட இந்தியாவில் இருந்து பிரிந்து செல்லும் உரிமையோடு நான்கு நாடுகள் கொண்ட அண்ணாவின் திராவிட நாட்டையோ அல்லது பெரியார் வழியில் தனி தமிழ் நாடோ அமைக்க போராடுவோம். இந்தியா என்பது ஹிந்தி நாடு அதன் ஆட்சியாளர்கள் இப்பொது தமிழ் நாட்டை ஆளும் ஆட்சியாளர்களயும் சேர்த்துதான் தமிழ் மக்களுக்கு எந்த ஒரு நன்மையையும் செய்யபோவது இல்லை. கள் தோன்றி மண்தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய மூத்த குடி என்பதனை மனதில் கொண்டு உலக தமிழர்களுக்கு என்று ஒரு ராஜ்ஜியம் அதுதான் தமிழ்நாடு அதோடு சேர்ந்த ஈழம். தமிழகத்தில் இருந்து ஈழ உறவுகளுக்கு பாலம் அமைப்போம்.

நன்றி: மினஞ்சல் செய்தி : தமிழன்

1 comment:

சேக்காளி said...

நடைமுறையில் சாத்தியமாகக் கூடியதா இது?.பக்கத்தில் நம் இனம் படுகொலை செய்யப்படும் போது நமக்கென்ன என்று இருந்த நாம்[இந்த பிரயோகமே தவறோ]தனி நாடு கேட்டு போராடுவதா?.போங்கண்ணே வெளயாடாதீங்க. ஞாயிற்றுக்கிழமை ராத்திரிக்கு மானாட மயிலாட பாக்கணும்.