கொழும்பு : பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்த யுக்திகளை, இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு ராணுவத்தினருடன் பகிர்ந்து கொள்ளும் வகை யில், சிறப்பு பயிற்சி முகாம்களை நடத்த, இலங்கை ராணுவம் முடிவு செய்துள்ளது. இலங்கையில் 30 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு போர், கடந்த 2009ல் முடிவுக்கு வந்தது. இதில், விடுதலைப்புலிகள் இயக்கத்தை முற்றிலும் அழித்து வெற்றி பெற்றதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்தது. இந்நிலையில் தான் செய்த பயங்கரவாதத்தை அண்டை நாடுகளுக்கும் கற்று கொடுக்கும் நோக்கோடு விடுதலைப்புலிகள் இயக்கத்துடனான போரில்,கையாண்ட தீவிரவாத யுக்திகளை வெளிநாட்டு ராணுவத்துடன் பகிர்ந்து கொள்ள இலங்கை ராணுவம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பயங்கரவாத சிறப்பு பயிற்சி முகாம் அடுத்த வாரம் துவங்க உள்ளது. இது குறித்து இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் ஜெகத் ஜெயசூர்யா கூறியதாவது: தங்களது இன அழிப்பு பயங்கரவாத ராணுவம் மேற்கொண்ட யுக்திகளை, வெளிநாட்டு ராணுவத்தினருடன் பகிர்ந்து கொள்ளும் வகையில், சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற உள்ளது என்று கூறினார்.

1 comment:
shocking
Post a Comment