Jan 9, 2011

அமெரிக்க பெண் எம்.பி., சுடப்பட்டார் : நீதிபதி, பெண் குழந்தை உட்பட 6 பேர் பலி.

வாஷிங்டன் : அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் வணிக வளாகத்துக்குள் புகுந்த இளைஞர் ஒருவர், துப்பாக்கியால் சுட்டதில், ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி., ஒருவர் படுகாயம் அடைந்தார். நீதிபதி, ஒரு பெண் குழந்தை உட்பட ஆறு பேர், சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதுகுறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, எப்.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். யார் இந்த கேப்ரியல் கிப்போர்டு? : துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளான கேப்ரியல், யூத இனத்தைச் சேர்ந்தவர். கடந்த 2006ம் ஆண்டிலும் இவர் எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார். அமெரிக்க பார்லிமென்ட்டின் விண்வெளி மற்றும் ஆராய்ச்சித் துறை கமிட்டியின் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். பார்லிமென்ட்டின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ராணுவப் பணிகளுக்கான கமிட்டியில், தற்போது உறுப்பினராக உள்ளார். இவரது கணவர் மார்க் கெல்லி, நாசா விஞ்ஞானி. கேப்ரியல், அமெரிக்க அதிபரின் நெருங்கிய தோழிகளில் ஒருவர். டயர் மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்ற தொழில்களையும் இவர் கவனித்து வருகிறார்.

No comments: