Jan 31, 2011

ஒரே நாளில் 2 லட்சம் ரூபாய் சம்பாதிக்கனுமா?

இந்தூர்,ஜன.31: இரண்டாவது மலேகான் குண்டுவெடிப்ப்பின் சாட்சியான திலீப் படிதாரைக் குறித்து துப்புக் கொடுத்தால் 2 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என சி.பி.ஐ அறிவித்துள்ளது. திலீப் படிதாரை கடந்த 2 ஆண்டுகளாக காணவில்லை. படிதாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டுமென நேற்று முன்தினம் மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்ற பெஞ்ச் உத்தரவிட்டிருந்தது. பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய குற்றவாளியாக போலீஸ் தேடிவரும் ஹிந்துத்துவா பயங்கரவாதி ராம்ச்ந்திர கல்சங்கரா என்ற ராம்ஜியின் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் திலீப் படிதார். 2008 ஆம் ஆண்டு நடந்த இரண்டாவது மலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக வாக்குமூலம் பதிவுச்செய்ய படிதாரை ஏ.டி.எஸ் கஸ்டடியில் எடுத்ததை அவருடைய குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

No comments: