Dec 5, 2010

பிரிட்டனின் கருப்புப் பட்டியலில் டக்ளஸ் தேவானந்தா.

கொழும்பு, டிச.4- இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பெயர் பிரிட்டன் நாட்டின் கருப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதன் காரணமாக அவர் ராஜபட்சவுடன் லண்டன் வருவதற்கான அனுமதி வழங்க பிரிட்டன் அரசு மறுத்துவிட்டதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே, அவருக்கு நுழைவு அனுமதி வழங்க அமெரிக்காவும் மறுத்தது. கடந்த செப்டம்பர் மாதம், அதிபர் ராஜபட்ச ஐநா சபையில் உரையாற்ற சென்றபோது டக்ளஸ் தேவானந்தா உடன் வர அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால், அவரது மனுவை அமெரிக்க அரசு நிராகரித்தது.

இந்தியாவில் டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் பல வருடங்களுக்கு முன்னர் அவர் மீது கொலை, கொள்ளை உள்பட பல கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: