குஜராத் மாநிலம் கோத்ரா கலவரம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட 4 ஆயிரத்து 545 குடும்பங்களைச் சேர்ந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் 81 குடியிருப்பு முகாம்களில் மிகப் பரிதாபமான நிலையில் இருந்து வருகின்றனர் எனும் உண்மையை உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த மக்களுக்கு வாழ்வுரிமையோ, உணவோகூடச் சரிவர இல்லாமல் அவதிப்படுகின்றனர் எனக் குழு அவ்வறிக்கையில் கூறியுள்ளது.உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் டாக்டர் என்.சி. சக்சேனா தன் அறிக் கையில் பின்வரும் அதிர்ச்சி தரும் தகவல்களைத் தந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான குடியிருப்புகள் எதையும் மாநில அரசு அமைத்துத் தரவில்லை. மொத்தம் உள்ள 81 குடியிருப்புகளில் அய்ந்தில் மட்டுமே பள்ளிகள் உள்ளன. இவற்றிலும் நான்கில் மட்டுமே மதிய உணவு வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்கான வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நான்கு மட்டுமே குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து வழங்குகின்றன. கருவுற்ற தாய்மார்களுக்கும், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கும் தரப்படும் உதவியை ஒரே ஒரு நிலையம் மட்டுமே அளிக்கிறது.குஜராத்தில் இந்து தீவிரவாதிகளால் எரித்து கொல்லப்பட்ட முஸ்லிம்கள்.
வழக்கு விசாரணை:
இந்த அறிக்கையைப் பரிசீலித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரிஜித் பசாயத் மற்றும் டி.கே. ஜெயின் ஆகியோர் கோடை விடுமுறைக்குப் பின் இது தொடர்பான விசாரணையைத் தள்ளி வைத்துள்ளனர். இடம்பெயர்ந்த மக்கள் உணவுக்கும் மற்ற தேவைகளுக்கும் மிகவும் சிரமப்படும் நிலைபற்றிய சங்கடம் தரும் தகவல்கள் கிடைத்துள்ளன. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபடி குஜராத் அரசு எவ்வித நடவடிக்கையும் நிறைவேற்றவில்லை.
குஜராத் அரசு ஒப்புதல்:
குழு அனுப்பிய கடிதத்துக்குப் பதில் எழுதிய நரேந்திர மோடி அரசு, 2002 கலவரத்தில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு நிவாரணக் குடியிருப்புகள் அரசால் செய்து கொடுக்கப்படவில்லை என்பதை ஒத்துக் கொண்டுள்ளது. “கலவரத்தில் வெடித்த வன்முறை பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்துவிட்டது. அவர்களுக்கு ஏற்கெனவே வேலை தந்து உதவியவர்கள் தற்போது வேலை தரத் தயாரில்லை. எனவே, அவர்கள் வேலை வாய்ப்பின்றி உள்ளனர்’’ என்று குழு தெளிவாகவே தெரிவித்துள்ளது.
இந்நிலையில், குஜராத் அரசு உச்சநீதிமன்றத்திற்குத் தவறான தகவல்களைத் தந்திருக்கிறது. நீதிமன்ற உத்தரவின்படி பாதிக்கப்பட்டோருக்குத் தரவேண்டிய உணவு, வேலைவாய்ப்பு ஆகியவற்றை அரசு தரவேயில்லை என்பதை சான்றுகள் மெய்ப்பிக்கின்றன எனக் குழு தெரிவித்திருக்கிறது.
ஆய்வு வெளிப்படுத்தும் அவலங்கள்:
குழுவின் உறுப்பினர்கள் முழு அளவில் ஆய்வு செய்துள்ளனர். 81 குடியிருப்புகளில் மூன்றில் மட்டுமே நியாய விலைக் கடைகள் உள்ளன. 4 ஆயிரத்து 545 குடும்பங்களில் 725 குடும்பங்களுக்கு மட்டுமே வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கான குடும்ப அட்டைகள் தரப்பட்டுள்ளன. இவர்கள் மீதான பொருளாதார புறக்கணிப்பு மிகவும் கடுமையாக நிலவுகிறது.
நீதிமன்ற அவமதிப்பு:
பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் குடியிருப்புகளில் நிலவும் மோசமான சூழலைக் கருத்தில் கொண்டு பார்த்தால், குஜராத் மோடி அரசின் தலைமைச் செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு அறிவிக்கை தரப்படவேண்டும் என்று குழுவின் தலைவர் டாக்டர் சக்சேனா தெரிவித்துள்ளார். தலைமைச் செயலாளர் மற்றுள்ள உயர் அலுவலர்கள் நீதிமன்றக் குழு அதிகாரிகளுக்குத் தவறான, பொய்ப் புள்ளி விவரங்களை அளித்துள்ளனர்.
குடியிருப்புகளில் வசிக்கும் எல்லாக் குடும்பங்களுக்கும் ’அந்தியோதயா’ அடையாள அட்டைகள் வழங்கப்பட வேண்டும்; இவர்கள் தங்கள் உடைமைகளை இழந்துவிட்டனர்; பொருளாதாரப் புறக்கணிப்பால் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்; தங்கள் வீடுகளுக்குச் செல்ல பயப்படுகின்றனர்; தொடக்கப்பள்ளிகளும், மதிய உணவுக் கூடங்களும் 81 குடியிருப்புகளிலும் தொடங்கப்படவேண்டும்; குழந்தைகளுக்கான வளர்ச்சித் திட்ட உதவிகள் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றக் குழு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
கோத்ரா சம்பவத்தை வைத்துக் கொண்டு இந்து மதவெறி சக்திகள் சிறுபான்மை இசுலாமிய மக்கள் மீது நடத்திய தாக்குதல் மிகக் கொடூரமானது. பல்லாயிரக்கணக்கான இசுலாமியர்கள் கொல்லப்பட்டனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இசுலாமியர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இசுலாமியப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர்.
குஜராத்தில் நடத்தப்பட்ட இந்து மதவெறியின் கோர தாண்டவம் ஆர்.எஸ்.எஸ்., பஜரங்தள், சங்பரிவார், பா.ஜ.க. போன்ற மதவெறிக் கட்சி, அமைப்புகளின் ரத்தம்படிந்த இன்னொரு பக்கத்தை உலகிற்கு அம்பலப்படுத்தியது.
இதுநாள்வரையில், இந்து பாசிச நரேந்திர மோடி அரசு, பாதிக்கப்பட்ட சிறுபான்மை இசுலாமிய மக்களுக்கு குறைந்தபட்ச நிவாரணம்கூட வழங்கவி்ல்லை. நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நீதி அமைப்புகளும் தேவையான முயற்சிகளை மெற்கொள்ளவில்லை.தற்போது உச்சநீதிமன்றம் அமைத்த குழு தனது அறிக்கையில், பாதிக்கப்பட்ட சிறுபான்மை இசுலாமியர்களுக்கு குஜராத் அரசு எதையும் செய்யவில்லை எனபதைத் தெளிவாக கூறியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
மொட்டுக்களையும்
விட்டுவைக்காத
வெறிப்பிடித்த
ஒ நாய்களே!
தொடும்போதும்
தோணலயோ;
உன் மகள் தோற்றம்
வரவில்லையோ!
மனம் விட்டு அழுகிறோம்;
கனத்துப்போனக் கயவன்
உனக்குப் பெயரும் மனிதன்
என்று நினைக்கையிலே!
மக்களின் மன உளச்சலைக்
காணுகையிலே;
மனதின் ஓரம் ஒர் இரச்சல்!
பள்ளிச்சென்றப் பிஞ்சுக்கு
நெஞ்சுடையும் மக்கள்;
குஜராத்தில் கருவருத்தக்
கதைகேட்டும் களங்காதச்
சிலைகள்!
மனம் கூட
மதம் கண்டு
இனம் கண்டுதான்
இறங்குமோ!
Post a Comment