Nov 22, 2010

ஆரோக்கியம் குறித்த தேசிய அளவிலான விழிப்புணர்வு பிரச்சாரம் : பாப்புலர் பிரண்ட் அறிவிப்பு.

பொதுமக்களின் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் எதிர்வரும் நவம்பர் 21 ம் தேதி முதல் நவம்பர் 28, 2010 வரை நாடு முழுவதும் நடைபெறும் என பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அறிவித்துள்ளது.உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் சுற்றுப்புற சூழலை தூய்மையானதாக மாசற்ற ஆரோக்கியமான நிலையில் வைத்திருப்பதில் பொதுமக்களின் பங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் "ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் Healthy People Healthy Nation" என்ற முழக்கங்களோடு பிரச்சாரம் நடைபெறும்.பாப்புலர் பிரண்ட் செயல்வீரர்கள் இருக்கும் பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் நடவடிக்கைகள், நோய்த்ததடுப்பு முறை, யோகா பயிற்சி, உடற்பயிற்சி, சரியான உணவு பழக்க வழக்கங்கள் பற்றிய பயிற்சி வகுப்புகள் மற்றும் செயல் விளக்க கூட்டங்கள் ஆகியவை உள்ளடக்கியிருக்கும்.விளையாட்டு நிகழ்ச்சிகள் பொது இடங்களில் உள்ள குப்பைகளை அகற்றும் துப்புரவுப்பனிகள் , ஆவணப்பட காட்சிகள் , தெருவோர நாடகங்கள் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்சிகள் நடத்துவதென திட்டமிடப்பட்டுள்ளது .இத்தகைய பொது நிகழ்சிகள் உள்ளூர் கல்வி மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து அவர்களின் ஒத்துழைப்புடன் அரசாங்கத்தின் பொது சுகாதார திட்டங்களை, முயற்சிகளை வலுப்படுத்தும் விதத்தில் பிரசாரம் அமையும்.
இது தொடர்பான விளம்பரங்கள் புத்தகங்கள் மற்றும் போஸ்டர்கள் ஆங்கிலம் ஹிந்தி, உர்து, பெங்காலி கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு, மணிப்பூரி போன்ற பல்வேறு மொழிகளில் அச்சிட்டு வெளியிடப்படும் . நாடுதழுவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது கடந்த ஆண்டு 2009 அக்டோபர் மாதம் நடத்திய பிரச்சாரம் பெருவாரியான மக்களின் பங்களிப்பையும் ஆதரவையும் வரவேற்பையும் பெற்றது

No comments: