Nov 24, 2010
இந்திய திருமண சட்டங்களும் அதில் உள்ள குழப்பங்களும்.
இந்திய குடும்ப அழிப்புச் சட்டங்களை இயற்ற “குடும்ப வன்முறை சட்ட நிதி” என்ற பெயரில் வெளிநாடு கொடுக்கும் நிதியுதவி! இவற்றில் உருவாகிக்கொண்டிருப்பவைதான் சமீப காலமாக உருவாகிக்கொண்டிருக்கும் 2005 Domestic Violence Act போன்ற சட்டங்கள்.
1.வரதட்சணை தடுப்புச் சட்டம் (1961) - இதில் இதுவரை வரதட்சணை கொடுத்த எந்தப் பெண்ணும் தண்டிக்கப்பட்டதில்லை.
2.IPC498A (1984) - இந்த சட்டப்படி மனைவி சொல்வது மட்டும்தான் உண்மை. மனைவி பொய்யாகப் புகார் கொடுத்தால் தண்டிக்க எந்தவித பிரிவுகளும் கிடையாது.
3.குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் (2005) - இந்த சட்டப்படி பெண் என்பவள் எந்த வன்முறையும் செய்யத் தெரியாதவள். ஆண்தான் எப்போதும் குற்றவாளியாகக் கருதப்படுவான்.
4.கள்ளக் காதல் உறவு (IPC497) - இந்த சட்டப்படி பெண்ணின் கள்ள உறவு என்பது புனிதமானது. இந்த தவறான உறவில் ஈடுபடும் பெண் தானே விரும்பி தவறு செய்தாலும் எந்த தண்டணையும் கிடையாது. ஆனால், ஆணுக்கு தண்டனை உண்டு.
ஒரேவித நோக்கத்திற்காக இதுவரை அடுக்கடுக்காகப் பலவித சட்டங்கள் தொடர்ந்து இயற்றப்பட்டு வருகிறது. ஆனால் சட்டத்தின் நோக்கத்தை முழுமையாகச் செயல்படுத்தாமல் வரதட்சணை கொடுப்பவர்களையும், சட்டத்தை சுயநலத்திற்காகப் பயன்படுத்துபவர்களையும் தண்டிக்காமல் ஆதரித்து வளர்க்கும் வகையில் இந்த சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.
அதற்குக் காரணம் பல பொய் வழக்குகள் பதிவானால்தான் அதிக புள்ளிவிபரம் காட்டி நிதியுதவி பெறமுடியும். எப்போதும் இதுபோன்ற புள்ளிவிபரங்களில் பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை மட்டும்தான் காட்டப்படும். கடைசியில் எத்தனை வழக்குகள் நீதிமன்றத்தில் குற்றம் என நிருபிக்கப்பட்டது என்று குறிப்பிடமாட்டார்கள். ஏனென்றால் புள்ளிவிபரம் காட்ட எண்ணிக்கையே இல்லாமல் போய்விடும் அல்லவா? அதனால் காவல்நிலையத்தில் எத்தனை FIR பதிவாகிறது என்பது மட்டும்தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதிக எண்ணிக்கையில் வழக்குகள் பதிவாக பலவகையான சட்டங்கள் தேவை. அவற்றை தவறாகப் பயன்படுத்தினால்தானே பதிவாகும் புகார்களின் எண்ணிக்கையும் அதிகமாகும். இந்த தந்திரம் தெரிந்தவர்கள் பெண்களின் பெயரால் பிழைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த உண்மையை உணர்ந்தவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?
நன்றி : தமிழ் மனம்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நீங்கள் கொடுத்திருக்கும் தகவலின் மூல பிரதி ”தகனமேடை” என்ற பதிவுத்தளத்தில் இருக்கிறது. www.ipc498a-crematorium.blogspot.com.
தமிழ்மனம் என்று தவறுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. சரியான இணைப்பைக் கொடுத்தால் மேலும் பலர் பயனடைவார்கள்.
Post a Comment