Nov 21, 2010
கோவை பள்ளிவாசல் கண்ணாடி கல்வீசி உடைப்பு: ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் காரணமா?
நேற்று முன்தினம் கோவை அருகே உள்ள குனியமுத்தூர் மூவேந்தர் நகரில் தாஜுல் இஸ்லாம் சுன்னத் ஜமா அத் கிளை பள்ளிவாசல் உள்ளது. தினசரி மாலை நேரத்தில் மின் தடை ஏற்படும் நேரத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலர் பள்ளிவாசல் கண்ணாடியை கல்வீசி தாக்கி உடைத்தனர். ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் உடைதிருபார்கள் என்று நம்பபடுகிறது. இதனையடுத்து பள்ளிவாசல் துணைத் தலைவர் ஹசன்,செயலாளர் ஹுசேன், பொருளாளர் அமானுல்லா ஆகியோருக்கும்,போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீஸ் உதவி கமிஷனர் பாலாஜி சரவணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தினார். மேலும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இதை ஆர்.எஸ்.எஸ்.தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் செய்திருப்பார்கள் என்று ஒரு பெயர் வெளியிட விரும்பாத உளவுத்துறை அதிகாரி தெரிவித்தார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பாசிச மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment