கோல்கத்தா, அக்.23- மேற்குவங்கத்தில் காவல்துறை ஆய்வாளர் ஒருவரும், தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவரும் மாவோயிஸ்ட் போராளிகளால் கடத்திச் செல்லப்பட்டனர்.பார்த்தா பிஸ்வாஸ் என்பவர் உளவுப்பிரிவில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். புரூலியா மாவட்டத்தில் உள்ள அயோத்யா என்னும் இடத்தில் இருந்து அவரும், தொண்டு நிறுவன பணியாளர் சமர்ஜித் போஸ் என்பவரும் கடத்திச் செல்லப்பட்டனர்.
"இதுகுறித்து மாவோயிஸ்டுகள் புரூலியா மாவட்ட காவல்துறை அலுவலகத்துக்கு தகவல் அனுப்பியுள்ளனர்." என்று மேற்குவங்க காவல்துறைத் தலைவர் நபர்ஜித முகர்ஜி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்."கடத்தப்பட்ட இருவரும் கோல்கத்தாவில் இருந்து வந்துள்ளனர். மாவட்ட போலீஸ் நிர்வாகத்தில் அவர்கள் செயல்படவில்லை என்பதால் அவர்களது செயல்பாடுகள் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது." என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் ஜாதவ் கூறினார்.கடத்தப்பட்டவர்களை விடுவிக்க மாவோயிஸ்டுகள் இதுவரை எந்த நிபந்தனையும் அறிவிக்கவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment