லண்டன், அக்.23- ஆப்கன் போர் குறித்த 15 ஆயிரம் ரகசிய ஆவணங்களை விரைவில் விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியிடுவோம் என்று அதன் நிறுவனர் ஜூலியன் அசான்ஜ் கூறியுள்ளார்.லண்டனில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது அவர் இதைத் தெரிவித்தார்.
ஒரு போரின் முதல் பலியே உண்மை தான். எனவே, உண்மையை வெளிப்படுத்தவே விக்கிலீக்ஸ் இணையதளத்தில் இராக் போர் குறித்த ஆவணங்களை வெளியிட்டோம். இதன் மூலம் அதிகபட்ச அரசியல் தீர்வுக்கு வழி ஏற்படுத்துவது குறித்த உணர்வை ஏற்படுத்தினோம்.
இராக் போரால், 2004 முதல் 2009 வரையிலான காலகட்டத்தில் லட்சக்கணக்கானோர் வன்முறைச் சாவை சந்தித்துள்ளனர். ஆப்கன் போர் குறித்த ரகசிய ஆவணங்களையும் ஏற்கெனவே வெளியிட்டுள்ளோம். மேலும், 15 ஆயிரம் ஆவணங்களை விரைவில் வெளியிடுவோம். இவ்வாறு ஜூலியன் அசான்ஜ் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment