பீஜிங், அக்.23- இந்தியாவின் அருணாசலப் பிரதேச மாநிலம் தனது நாட்டுக்கு சொந்தமானது போன்று இணையதளத்தில் உலக வரைபடத்தை சீனா வெளியிட்டுள்ளது. "கூகுள் எர்த்" இணையதளத்துக்குப் போட்டியாக சீன மொழியில் தொடங்கப்பட்டுள்ள இணையதளத்தில் இவ்வாறு விஷமமான முறையில் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. தெற்கு திபெத் என்று சீனா வாதிட்டு வரும் பகுதியில் அருணாசலப் பிரதேசம் இணைந்திருப்பது போல் அந்த வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஜம்மு-காஷ்மீரில் உள்ள லடாக் பகுதிக்கு உட்பட்ட அக்சய் சின் பகுதியும் சீனாவுக்கு சொந்தமானது போன்ற தோற்றத்தில் அந்த வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாவின் ஸின்ஜியாங் மாகாணத்துடன் இந்தியாவின் அக்சய் சின் பகுதி இணைந்திருப்பது போன்று வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
சீனாவுடனான உறவில் சிக்கல் உருவாகும் என்ற கருத்தின் அடிப்படையில், தலாய் லாமாவுக்கு தில்லியில் உள்ள மத்திய அரசின் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்குவதை இந்திய வெளியவுறவு அமைச்சகம் தடுத்து வைத்துள்ள நிலையில், சீனா வேண்டுமென்றே இணையதளத்தில் இவ்வாறு விஷமத்தனமான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment