Sep 29, 2010

பாபர் மசூதி தீர்ப்பை வெளிவரவிடாமல் காலதாமதப்படுத்த காங்கிரஸ் சதி.

புதுடெல்லி,செப்.29:பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைக்கக்கோரி மனுத்தாக்கல் செய்த ரமேஷ் சந்திர திரிபாதிக்கு பின்னணியில் காங்கிரஸ் உள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.உ.பி.மாநிலத்தின் முன்னாள் முதல்வரான ஸ்ரீபத் மிஷ்ராவின் நெருங்கிய உறவினர்தான் திரிபாதி. நீதிமன்றத் தீர்ப்பு முஸ்லிம்களுக்கு சாதகமானால் அரசு கட்டுப்பாட்டிலிருக்கும் பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த நிலம் சுன்னி வக்ஃப் போர்டிடம் ஒப்படைப்பது காங்கிரஸ் கட்சியை திரிசங்கு நிலையில்
தள்ளும் என்பதால் திரிபாதியை முன்னிறுத்தி நீதிமன்றத்தை அணுகியதாக கருதப்படுகிறது.

பாப்ரி மஸ்ஜித் நிலத்தை சர்ச்சைக்குரிய பகுதியாக மாற்றுவதில் முக்கிய பங்காற்றிய உத்தரபிரதேசத்தின் காங்கிரஸ் பாரம்பரியத்தில் வந்த நபர்தான் திரிபாதி. அயோத்தியா அடங்கியுள்ள பைஸாபாத்தின் அருகிலிலுள்ள மிஜோடா கிராமவாசிதான் 73 வயது திரிபாதி. அயோத்தியை மையமாகக் கொண்டு ராமர்கோயில் கட்டுவதற்கு முயற்சி மேற்கொண்ட குடும்ப பாரம்பரியத்திற்கு சொந்தக்காரர்தான் காங்கிரஸ்காரரான திரிபாதி.

ராணுவத்தில் தணிக்கையாளராக பணியாற்றி ஓய்வு பெற்று தற்பொழுது மிஜோடா கிராமத்தில் வசித்து வருகிறார் அவர்.பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தில் ராமர்கோயில் கட்ட 1980 களில் தீவிர முயற்சியை மேற்கொண்டவர் உ.பி. மாநிலத்தில் காங்கிரஸ் முதல்வராகயிருந்த ஸ்ரீபத் மிஷ்ரா.

1980இல் பாப்ரி மஸ்ஜிதோடு இணைந்திருக்கும் 32 ஏக்கர் நிலத்தை ராம்கதா பூங்கா அரசு செலவில் நிர்மாணிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர் ஸ்ரீபத் மிஷ்ரா.1949 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி நள்ளிரவில் மர்மமான முறையில் பாப்ரி மஸ்ஜிதிற்குள் விக்கிரகங்களை நிறுவி தொழுகைக்கு முஸ்லிம்களை தடைச் செய்ததைத் தொடர்ந்து சட்டத்தின் பிடியில் சிக்கிக்கொண்ட விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது இந்த நிலத்தை இந்த காங்கிரஸ் அரசு கையகப்படுத்தியதால்தான். அன்று கையகப்படுத்தப்பட்ட 32 ஏக்கர் நிலத்தைத்தான் உ.பி.யில் பா.ஜ.கவின் முதல்வராகயிருந்த கல்யாண்சிங் ராமர் கோயில் கட்ட வி.ஹெச்.பியிடம் ஒப்படைத்தார்.

பாப்ரி மஸ்ஜித் வழக்கில் சூழ்நிலைகள் மஸ்ஜிதுக்கு அனுகூலமாக வந்த காலக்கட்டங்களிலெல்லாம் காங்கிரஸ் நடத்திய விளையாட்டைத்தான் இதிலும் தொடர்வதாக, உத்தரபிரதேச மாநில சுன்னி வக்ஃப் போர்டு வழக்கில் உதவும் ஃபைஸாபாத் ஹிலால் கமிட்டி கன்வீனர் காலிக் அஹ்மத் கான் குறிப்பிட்டார்.காங்கிரஸ் பாரம்பரியத்தில் வந்த திரிபாதிக்கு தங்களுடன் எவ்வித தொடர்புமில்லை என நிர்மோஹி அகோராவின் பாபா ராம்தாஸும் உறுதிப்படுத்தினார்.

No comments: