Sep 29, 2010

கடந்த பத்தாண்டுகளில் 6541 மதக் கலவரங்களை திட்டமிட்டு நடத்திய ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்.

புதுடெல்லி,செப்.29:கடந்த 10 ஆண்டுகளுக்கிடையே 6541 மத கலவரங்கள் நடைப்பெற்றுள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.இந்த கலவரங்கள்யாவும் ஹிந்து பாசிச வெறியர்களால் முஸ்லிம்களுக்கும், கிறஸ்தவர்களுக்கும் எதிராக திட்டமிட்டு நடத்தப்பட்டவையாகும். இக்கலவரங்களில் 2234 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள். 21,460 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்களில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள் ஆவர்.

2001 முதல் 2009 வரையிலான காலக்கட்டங்களில்தான் இவ்வளவு கலவரங்களும் நடந்தேறியுள்ளன. இதில் மிக அதிகமான கலவரங்கள் 2008 ஆம் ஆண்டு நிகழ்ந்துள்ளன.2008 ஆம் ஆண்டு மட்டும் 943 கலவரங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால் இதில் அதிகம்பேர் கொல்லப்பட்டது குஜராத் இனப் படுகொலையின் போதுதான். அதில் முஸ்லிம்கள் 2500 கொல்லப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சக புள்ளி விபரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. ஆனால் குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அரசு புள்ளிவிபரத்தை காட்டிலும் பன்மடங்கு அதிகம் என்று இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் குஜராத் ஜமாத்துக்கள் தெரிவிக்கின்றன.

மதக் கலவரங்களை அரசு அலட்சியமாக கருதிவிட்டு குண்டுவெடிப்புகளில் அதிகம் கவனம் செலுத்தும் வேளையில் குண்டுவெடிப்புகளை விட கலவரங்களில் கொல்லப்பட்டவர்கள்தான் அதிகம் என புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. 2001 ஆம் ஆண்டிற்கு பிறகு 28 பெரிய குண்டுவெடிப்புகள் நடந்தன. அதில் கொல்லப்பட்டவர்கள் 990 பேர். 2791 பேருக்கு காயமேற்பட்டது.நடந்த குண்டுவெடிப்புகளில் பெரும்பான்மை ஹிந்து தீவிரவாத அமைப்புகளால் திட்டமிட்டு நடத்தப்பட்டு முஸ்லிம்கள் மீது பழி போடப்பட்டவை. பின்னர் கார்கே போன்ற உளவுத்துறை அதிகாரியால் இவை ஹிந்து தீவிரவாத அமைப்புகளால் நடத்தப்பட்டவை என்று கண்டுபிக்கபட்டது. அதனால் பாவிகள் கார்கேயை திட்டமிட்டு கொன்றார்கள்.இதுதான் இன்றைய இந்தியாவில் முஸ்லிம்களின் நிலையாக உள்ளது.

No comments: