Jun 7, 2010

மெக்சிகோவில் இதயங்களை அகற்றி மர்மக்கொலை : ஆறுபேரின் சடலங்கள் மீட்பு.

மெக்சிகோவின் கென்குன் நகரத்துக்கு அருகாமையில் ஆறு சடலங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளதுடன் அவற்றில் மூன்று சடலங்களிலிருந்து இதயங்கள் அகற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்குள்ள சுற்றுலா விடுதியொன்றுக்கு அருகிலேயே இச்சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இச்சடலங்களில் நான்கு ஆண்களுடையது என்றும் இரண்டு பெண்களுடையது என்றும் பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். இவர்களைக் கொலை செய்தவர்கள் கடுமையான சித்திரவதை செய்துள்ளதற்கான அடையாளங்கள் இருப்பதாகவும் பொலிஸார் ஊடகங்களுக்குக் கூறியுள்ளனர்.

கொலைசெய்யப்பட்டவர்களின் முதுகுப்பகுதியில் ‘Z’ அடையாளம் கீறப்பட்டுள்ளது. இது சீட்டா எனப்படும் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் அடையாளம் எனவும் சொல்லப்படுகிறது. மெக்சிகோவில் கடந்த 2006ஆம் ஆண்டுமுதல் 22ஆயிரத்து 700 பேர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதுதொடர்பான வன்முறைகளால் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: