Jun 19, 2010

ஆண்டர்சனை இந்தியா கொண்டு வர சட்ட அமைச்சகம் (ஊழல் பெரிச்சாளிகள்) பரிந்துரை.


டெல்லி: போபால் விஷ வாயு கசிவு விவகாரத்தில் யூனியன் கார்பைட் நிறுவன முன்னாள் தலைவர் ஆண்டர்சனை கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான அமைச்சரவைக் குழுவிடம், சட்ட அமைச்சகம் இந்த பரிந்துரையை சமர்ப்பித்துள்ளது.போபால் ஆலையின் தவறான வடிவமைப்பே, விஷ வாயு சம்பவத்துக்குக் காரணம் என்பதால் இதற்கான முழுப் பொறுப்பையும் யூனியன் கார்பைட் தான் ஏற்க வேண்டும் என்றும் சட்ட அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

நேற்றும் இன்றம் சிதம்பரம் தலைமையிலான குழு கூடி இந்த விவகாரம் குறித்து விவாதித்தது. இன்றைய கூட்டம் தொடங்கியதும் இந்த விவகாரத்தில் இரு நாட்டு உறவு பின்னணி, தூதரகரீதியிலான வழிமுறைகள் ஆகியவை குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ் அமைச்சர்களுக்கு விளக்கம் தந்தார். இன்றைய கூட்டம் முடிந்த பி்ன் நிருபர்களிடம் பேசிய சிதம்பரம், போபால் விவகாரம் தொடர்பாக அனைத்து சட்டரீதியான வழிமுறைகள் குறித்தும் விவாதித்துள்ளோம் என்றார்.

No comments: