Jun 11, 2010

19வது உலகக்கோப்பை கால்பந்து தொடங்கியது.

உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் 19வது உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடர் ஜோஹன்னஸ்பர்க் நகரில் இன்று தொடங்குகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியை சர்வதேச கால்பந்து சம்மேளனம் நடத்தி வருகிறது.தற்போது தென் ஆப்பிரிக்காவில் 19வது உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த கோலாகல திருவிழா ஜோஹன்னஸ்பர்க்கில் தொடங்குகிறது. உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் தொடக்க விழா நேற்றிரவு ஆர்லான்டோ ஸ்டேடியத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இன்று முதல் போட்டிகள் தொடங்குகின்றன.ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெறும் முதல் போட்டியில்,தென் ஆப்பிரிக்காவும், மெக்சிகோவும் மோதுகின்றன.

ஜூலை 11ம் தேதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன. அன்று இறுதி்ப் போட்டி நடைபெறுகிறது. மொத்தம் 32 அணிகள் இதில் கலந்து கொள்கின்றன. 64 போட்டிகள் நடைபெறவுள்ளன. 32 அணிகளும் தலா நான்கு அணிகளைக் கொண்ட எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 16 அணிகள் காலிறுதிப் போட்டிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும். அவற்றிலிருந்து 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.அதிலிருந்து நான்கு அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். பிரேசில், அர்ஜென்டினா ஆகிய அணிகள் வழக்கம் போல ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பையும்,ஆதரவையும் ஏந்தியபடி போட்டித் தொடருக்குள் நுழையவுள்ளன.பிரேசிலே கோப்பையை வெல்லும் என பொதுவான எதிர்பார்ப்பு நிலவுகிறது.

No comments: