Apr 11, 2010

கருத்தரித்தல் குறித்து திருமதி. டாக்டர் க.பாலகுமாரி எம்.டி, - டி.ஜி.ஒ, அவர்கள் சிறப்பு கட்டுரை.

"படிப்பதற்கு, பயணத்திற்கு,வீடு கட்ட, திருமணத்திற்கு" என எல்லாவற்றிற்கும் திட்டமிடுகிறோம். ஆனால் கர்ப்பம் தரிப்பதற்கு திட்டமிட்டு செய்கிறோமா? நூற்றுக்கு 98 சதவீதம் மக்கள் திட்டமிடாமல்தான் கர்ப்பம் தரிக்கின்றனர். திட்டமிட்டு கர்ப்பம் தரிப்பது என்றால் என்ன? எதற்கெல்லாம் திட்டமிட வேண்டும்? என்பது பற்றி திருமதி, டாக்டர் க.பாலகுமாரி எம்.டி,டி.ஜி.ஒ,அவர்கள் தாய்சேய் நலம், மற்றும் திட்டமிட்டு கருத்தரித்தல் கூறுவதாவது.

முதலில் வயது: 21 வயதிற்கு மேல் கர்ப்பம் தரிக்க முயற்சி செய்வது நல்லது. 18 வயதில் கல்யாணம் செய்து கொண்டால் கூட ஒரு சில வருடங்கள் தள்ளிப்போடுவது நல்லது. அதே போல் 35 வயதிற்குள் குழந்தைகளை பெற்று முடிப்பது நல்லது. சிறிய வயதில் கர்ப்பம் தரித்தால், தாயே இன்னும் முழு வளர்ச்சி அடைந்திருக்க மாட்டார். போதிய மனப்பக்குவம் இருக்காது.

இரண்டாவதாக யோசிக்க வேண்டிய விஷயம் எடை: எடை 18 வயதிற்கு மேல்,உயரத்திற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். வயது ஏற ஏற எடை ஏறக்கூடாது. உயரத்திற்கு ஏற்ற எடையை எவ்வாறு கணிப்பது இதனை BMI என்ற அலகு மூலம் கணிக்கவும். BMI = BODY MASS INDEX. எடை = கிலோகிராமில்,உயரம் =மீட்டரில்,BMI = 20 -23 சரியான எடை, BMI = 19 க்கு கீழ் குறைவான எடை நோஞ்சான், BMI = 24 - 30 சற்று அதிக எடை, BMI = 31 க்கு மேல் குண்டு.கர்ப்பம் தரிக்கும் போது BMI 20 - 23 இருப்பது நல்லது.BMI 19 க்கு கீழ் இருந்தால் சற்று நன்றாக சாப்பிட்டு உடம்பைத் தேற்றிய பிறகு கர்ப்பம் ஆவது நல்லது.அதிக எடை குண்டாக இருப்பவர்கள்,உணவுக் கட்டுப்பாடு,உடற்பயிற்சி செய்து எடையை குறைத்துக் கொள்வது நல்லது.நிறைய பேர் கர்ப்பம் தரிக்க முயற்சிக்கும்போது உடற்பயிற்சி செய்யக் கூடாது என்று நினைத்துக் கொண்டு உள்ளனர். கட்டாயம் உடற்பயிற்சி செய்யலாம் செய்வது நல்லது.

மூன்றாவது: இரத்தபரிசோதனைகள்: HEMOGLOBIN ஹீமோகுளோபின் - உடம்பில் இரத்தம் எந்த அளவு இருக்கிறது என்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பொதுவாக 12 -14 கிராம்ஸ் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 10 கிராம் இருக்க வேண்டும். அதற்கும் கீழே இருந்தால்,இரும்புச்சத்து மாத்திரைகள்,சரியான உணவு சாப்பிட்டு இரத்த அளவை சரியான அளவுக்கு கொண்டு வந்தபின் கர்ப்பம் ஆவது நல்லது. இரத்த சோகையுடன் கருதரித்தால் கருச்சிதைவு,குறைப்பிரசவம்,குறைந்த எடையுள்ள குழந்தை போன்ற பிரச்சனைகள் வர
வாய்ப்புள்ளது.

இரத்தத்தில் சர்க்கரை அளவு: சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் கருச்சிதைவு,
குறையுள்ள குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது.இப்பொழுது உணவு முறைமாற்றங்கள், வாழ்க்கை முறைமாற்றங்கள் சிறிய வயதிலேயே சர்க்கரை வியாதி வர ஆரம்பித்துள்ளது எனவே அனைவரும் சர்க்கரை பரிசோதனை செய்து கொள்வது நல்லது.தைராய்டு பிரச்சனை இதுவும் நம் ஊரில் அதிகம் காணப்படும் பிரச்சனை. பரிசோதனை செய்து கொண்டு கர்ப்பம் தரிப்பது நல்லது.

நான்காவது: தடுப்பு ஊசிகள்: MMR, CHICKEN BOX, HEPT B, தட்டம்மை,புட்டம்மை,
ருபெல்லா அம்மை, சின்னம்மை, B Type மஞ்சள், காமாலை வராமல் தடுக்க ஏற்கனவே தடுப்பூசி போடவில்லை என்றால் போட்டுக்கொள்வது நல்லது.இப்பொழுது கருப்பை புற்று நோய் வராமல் தடுக்கவும் ஊசி உள்ளது. அதுவும் போட்டுக்கொண்டால் நல்லது.

ஐந்தாவது: எந்த மாதத்தில் குழந்தை பிறக்க வேண்டும்,வேண்டாம் என்று திட்டமிடுதல்:
தீட்டு வந்த தேதியில் இருந்து 280 நாட்கள்(அதாவது 40 வாரங்கள் அல்லது 9 மாதம் + 10 நாட்கள்) கழித்து குழந்தை பிறக்கும் .இதை உபயோகித்து எப்பொழுது வேண்டும் அல்லது
வேண்டாம் என்று கண்க்கிட்டு கர்ப்பம் தரிக்க முயற்சிக்கலாம் அல்லது தள்ளிப்போட தடுப்பு முறைகள் உபயோகிக்கலாம்.

ஆறாவது: போலிக் ஆசிட் மாத்திரைகள்: FOLICACID குழந்தைக்கு முதுகு தண்டுவடத்தில்
குறைகள் ஏற்படாமல் இருப்பதற்காக எடுத்துக்கொள்ள வேண்டும்.இதனை கருதரிக்கும்
முன்பிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும்.

No comments: