Apr 8, 2010

நேரடி தொலைபேசி வசதி:​ இந்தியா-சீனா.

நேரடி தொலைபேசி வசதியை ​(ஹாட்லைன்)​ ஏற்படுத்திக் கொள்ள சீனாவுடன் இந்தியா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.சீனாவுக்கு 4 நாள் பயணமாகச் சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.​ கிருஷ்ணாவும்இ​​ சீன வெளியுறவுத் துறை அமைச்சர் யாங் ஜியேச்சியும் இதற்கான ஒப்பந்தத்தில் புதன்கிழமை கையெழுத்திட்டனர்.

இதன்மூலம் இரு நாட்டு பிரதமர் அலுவலகங்களுக்கும் நேரடி தொலைபேசி வசதி ஏற்படுத்தப்படும்.​ இதன்மூலம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்'​​ சீனப் பிரதமர் வென் ஜியாபோ விரும்பும்போதெல்லாம் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆலோசனை நடத்திக் கொள்ள முடியும்.சமீப ஆண்டுகளாக இந்தியா முதன்முறையாக வெளிநாட்டுடன் ஹாட்லைன் வசதியை ஏற்படுத்திக் கொண்டது இதுவே முதல்முறையாகும்.

கடந்த ஆண்டு ஜூனில் ரஷியாவிலுள்ள யேகேத்தரின் பர்க் நகரில் நடைபெற்ற கூட்டத்தின்போது பிரதமர் மன்மோகன் சிங்கும்'​​ சீன அதிபர் ஹு ஜின்டாவோவும் எடுத்த முடிவின்படி இந்த ஹாட்லைன் வசதிக்கான ஒப்பந்தம் இப்போது நடந்துள்ளது.
சீன வெளியுறவுத் துறை அமைச்சர் யாங் ஜியேச்சியுடன் நடந்த முதல் சுற்று பேச்சுவார்த்தைக்குப் பின்னர் நிருபர்களிடம் எஸ்.எம்.​ கிருஷ்ணா கூறியதாவது:

ஹாட்லைன் வசதியை ஏற்படுத்துவதன்மூலம் இந்தியாவும்இ​​ சீனாவும் எவ்வளவு தூரம் நெருங்கியிருக்கிறது என்பதை அறியமுடியும்.என்னுடைய சீனப் பயணத்தின் முக்கிய அம்சமாக இது அமைந்துள்ளது.​ இரு நாடுகளுக்கு இடையிலான 60 ஆண்டுக்கு நல்லுறவுக்கு அடையாளமாக இது திகழ்கிறது.விசா பிரச்னை உள்பட அனைத்து விதமான பிரச்னைகள் குறித்து சீன அமைச்சருடன் ஆலோசனை நடத்தியுள்ளேன்.​ சீன வெளியுறவு அமைச்சருடன் நான் நடத்திய பேச்சுவார்த்தை எனக்கு திருப்தியளிக்கிறது.​ பேச்சுவார்த்தை அர்த்தமுள்ளதாகவும் அமைந்தது.

சீனாவுடன் நல்லுறவைத் தொடரவே இந்தியா விரும்புகிறது.​ இந்திய வெளியுறவுக் கொள்கையில் இதற்கு அதிக முன்னுரிமை கொடுத்துள்ளோம்.இந்திய-சீனா நாடுகளுக்கு இடையிலான நட்புணர்வை அதிகரிக்கவும் விரும்புகிறோம்.​ மேலும் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் இந்த ஆண்டு ரூ.​ 2.88 லட்சம் கோடியையைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல்'​​ சீனாவுக்கு வருகை தரவேண்டும் என்று அந்நாட்டுத் தலைவர்கள் விரும்புகின்றனர்.​ அது இந்த ஆண்டு நடைபெறும் என்று எதிர்பார்க்கிறேன்.

பிரேசிலில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள பிரிக் உச்சி மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங்கும்'​​ சீன அதிபர் ஹு ஜின்டாவோவும் சந்தித்துப் பேசுவர் என்றார் அவர்.
இந்தியர்களின் குடும்பத்தாருடன் கிருஷ்ணா சந்திப்பு:​ ​ வைரக் கடத்தல் சம்பந்தமாக குற்றம்சாட்டப்பட்டுள்ள 21 இந்தியர்களின் குடும்பத்தாரை மத்திய அமைச்சர் கிருஷ்ணா சந்தித்துப் பேசினார்.தெற்கு சீனப்பகுதியிலுள்ள ஷென்ஜென் நகரில் வைரம் கடத்தியதாக 21 இந்தியர்கள் கடந்த ஜனவரியில் சீன போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.​ அவர்களை விடுவிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர்களது குடும்பத்தார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் இந்தியர்களின் குடும்பத்தாரை கிருஷ்ணா சந்தித்து'​​ தேவையான நடவடிக்கையை இந்திய அரசு எடுக்கும் என்று உறுதி அளித்தார். இது தொடர்பாக சீன பிரதமர் வென் ஜியாபோ'​​ அமைச்சர் யாங் ஜியேச்சி ஆகியோருடன் பேசுவதாகவும் அவர் உறுதி அளித்தார்.​ மேலும் கைதாகி சிறையிலிருக்கும் இந்தியர்களை அவர்களது குடும்பத்தார் சந்திக்கவும் சீன அதிகாரிகள் அனுமதிக்கவேண்டும் என்றும் கிருஷ்ணா வலியுறுத்தியுள்ளார்

No comments: