Apr 9, 2010

குஜராத்தில் கலவரத்தை உண்டாக்க குண்டு தயாரிக்கும் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள்.


வதோதரா: குஜராத் மாநிலம் வதோதராவில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.வதோதராவின் மஞ்சள்பூர் என்ற இடத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்ட்டத்தில் 3 நாட்டு வெடிகுண்டுகள் இன்று வெடித்தன. இதனால் வதோதராவில் பதட்டம் ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸ் கமிஷனர் ராகேஷ் அஸ்தானா கூறுகையில், இந்த கட்டிடம் ஒரு ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தை சார்ந்தவருக்கு உரியது. இந்த குண்டுகள் நாட்டு வெடிகுண்டுகள்தான். இதனால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஒரு வெடிக்காத குண்டை கண்டுபிடித்து அதை செயலிழக்க செய்தோம். குண்டுகளை தடவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த வெடிகுண்டுகள் எப்படி இங்கு வந்தன, ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் குண்டுகள் தயாரிக்கும் பொது வெடித்ததா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது என்றார் அவர்.

No comments: