Mar 23, 2010
கஷ்மீர் அவலங்கள் குறித்து ஹுர்ரிய்யத் மாநாட்டுக் கட்சியின் தலைவர் மீர்வாய்ஸ் ஃபாரூக் ஐ.நா கருத்தரங்கில் உரை.
ஸ்ரீநகர்:கஷ்மீர் விவகாரத்தில் இந்தியா சர்வதேச சமூகத்தை தவறாக புரிந்துக்கொள்ள வைக்கிறது என ஹுர்ரிய்யத் மாநாட்டுக் கட்சியின் தலைவர் மீர்வாய்ஸ் ஃபாரூக் தெரிவித்துள்ளார்.பொருளாதார திட்டங்கள், ஆட்சி நடவடிக்கைகள் போன்ற தொடர்ச்சியற்ற செயல்பாடுகளை உயர்த்திக்காட்டி எதார்த்த பிரச்சனையை மறைக்க இந்திய அரசு முயற்சித்து வருகிறது என சுயநிர்ணய உரிமை தடைகள் தொடர் போராட்டங்கள் என்ற தலைப்பில் ஐ.நா மனித உரிமைக் கமிட்டியின் கருத்தரங்கில் உரையாற்றினார் மீர்வாய்ஸ்.
கஷ்மீர் பிரச்சனை என்பது ஒரு பூகோளரீதியான பிரச்சனையல்ல, மாறாக அது ஒரு அரசியல் பிரச்சனை. கஷ்மீரில் நீடிக்கும் அடிப்படையான உண்மைகளை சுட்டிக்காட்டத்தான் ஹுர்ரியத் என்றுமே முயற்சிச் செய்து வருகிறது.இந்தியாவும், பாகிஸ்தானுக்குமிடையேயான எல்லைப் பிரச்சனையல்ல அது. மாறாக அது ஒரு சமூகத்தின் அரசியல் பிரச்சனை. கஷ்மீரில் வாழும் ஒன்றரைக்கோடி மக்கள் விரும்புவது ஐ.நா உள்ளிட்ட சர்வதேச சமூகம் களமிறங்கினால்தான் தங்களுடைய பிரச்சனைகள் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் என்று.
1947 முதல் தொடரும், 1990களில் வலுவடைந்த எதிர்ப்புப் போராட்டத்தை ஒரு மக்கள் போராட்டமாக கருதாமல் அதனை பாகிஸ்தான் கண்கள் மூலம் காண்பதே இந்தியா முயன்று வருகிறது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு, அதற்கு அதிகமானோர் சிறையிலடைக்கப்பட்டு, காணாமல் போன, சித்திரவதைகளுக்கு பலிகடாவாக்கப்பட்டதற்காக மக்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்புணர்வை வெளிநாட்டு சக்திகள் தூண்டிவிட்டது எனக்கூறுவது உண்மையை மறைப்பதாகும்.
இந்தியாவுடன் நாங்கள் சமாதானப் பிரச்சனைக்கு தயாரானாலும் இந்தியா பிரச்சனையை தீர்க்க விரும்புவது ராணுவத்தீர்வின் மூலமாக. சமாதான பேச்சுவார்த்தை நடத்தும் பொழுதும் அதனை துப்பாக்கி முனையில்தான் இந்தியா நடத்துகிறது. தங்களுடைய கடந்த காலங்களை மறப்பதற்கு கஷ்மீர் மக்களால் இயலாது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கஷ்மீரில் நடந்துவரும் எதிர்ப்புப் போராட்டங்கள் அதனைத்தான் உணர்த்துகிறது. பத்து லட்சம் மக்கள் கலந்துக் கொண்ட போராட்டங்கள் கஷ்மீரில் நடந்துள்ளது.
துப்பாக்கிகளுடனும், கிரேனேடுகளுடன் அல்ல அவர்கள் போராட்டம் நடத்தியது, தங்களுடைய நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்திய சமாதான போராட்டங்கள் அவை. உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடாக தன்னைக் காட்டிக்கொள்ளும் இந்தியா கஷ்மீர் விவகாரத்தில் ஜனநாயகத்திற்கு விரோதமான நடவடிக்கைகளை மேற்க்கொண்டு வருகிறது. ராணுவத்தினருக்கு சிறப்பு உரிமை வழங்கப்பட்டு ஏற்றப்பட்டுள்ள சட்டங்கள் அதற்கு உதாரணமாகும்". இவ்வாறு அவர் உரையாற்றினார்.
நன்றி :தேஜஸ் மலையாள நாளிதழ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment