சென்னை: சென்னை துறைமுகத்தில் இருந்து அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்படவிருந்த ஒரு பார்சலில் இந்திய கடற்படை குறித்த வரைபடங்கள் மறைத்து வைக்கப்படிருந்தது கண்டுபிடிக்கப்ட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கு ராணுவ ரகசியங்கள் கடத்தப்படும் முயற்சியாக இது இருக்கக் கூடும் என்ற கோணத்தி்ல மத்திய உளவுப் பிரிவு தனது விசாரணையை தொடங்கியுள்ளது.
சென்னை துறைமுகத்தில் இருந்த 5 பெட்டிகளில் சுங்கத் துறையினர் சோதனையிட்டபோது திடுக்கிட்டனர். பெட்டிகள் அனைத்தும் சேலத்தைச் சேர்ந்த, அமெரிக்காவில் வசிக்கும் அட்ரைன் மார்லே (வயது 78) என்பவருக்கு அனுப்பப்படுவதாகத் தெரிந்தது. பதிவேடுகளைப் பார்க்கும் போது, மார்லே அவற்றை அமெரிக்காவில் உள்ள தனது முகவரிக்கு அவரே 'புக்' செய்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரு பார்சலில் இருந்த ஆவணங்கள் மிக ரகசியமான தகவல்களை உள்ளடக்கியிருந்தன. இதில் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் கடற்படை தளத்தின் 'புளு பிரின்ட்', ஹைதராபாத் விமான நிலையத்தின் புளு பிரின்ட் போன்ற ஆவணங்கள் இருந்தன. பொது மக்களுக்கு இவை தேவையற்ற ஆவணங்களாகும். ஆனால் மார்லேயின் பெட்டிக்குள் அவை ஏன் வந்தது என்ற கேள்வி எழுந்தது.
அமெரிக்காவுக்கு அவை அனுப்பப்படுவதால் உடனடியாக மத்திய உளவுத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டுள்ளது. இப்போது மத்திய உளவுத் துறை தனது விசாரணையை தொடங்கியுள்ளது. மற்ற 4 பார்சல்களையும் சோதனை போட்ட போது, அவற்றில் மார்லேயின் சொந்த உடமைகள் காணப்பட்டன. மார்லேயின் முகவரியை கண்டறிந்து, அவரைப் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
[url=http://buyaccutaneorderpillsonline.com/#15781]accutane without prescription[/url] - buy accutane online , http://buyaccutaneorderpillsonline.com/#5088 generic accutane
[url=http://buyonlinelasixone.com/#13779]buy cheap lasix[/url] - lasix cost , http://buyonlinelasixone.com/#5882 lasix online without prescription
Post a Comment