மும்பை:பிரபல வழக்கறிஞரும் மலேகான்,மும்பை ரெயில் குண்டு வெடிப்புகளில் கைதுச் செய்யப்பட்டுள்ள அப்பாவி மக்களுக்காக வழக்கை எடுத்து நடத்தி வந்த ஷாஹி ஆஸ்மி கடந்த வியாழக்கிழமை அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டிருந்தார்.
இக்கொலைத் தொடர்பாக 3 ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் போலீசில் சிக்கியுள்ளதாக மும்பை குற்றவியல் துணைக்கமிஷனர் ராகேஷ் மரியா தெரிவித்துள்ளார்.
மும்பை க்ரைம் பிராஞ்ச் போலீஸ் கைதுச் செய்துள்ள மூன்று ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகளின் பெயர்கள் தேவேந்திர பாபுராவ் ஜக்தாப்(வயது 28), பிண்டு தீந்திர தக்லே(வயது 25), வினோத் யஷ்வந்த்(வயது 32) ஆகியோராவர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment