Feb 25, 2010

அதிக தங்கம் வைத்துள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

புது தில்லி: தங்க நகை வாங்குவதில் இந்தியா முன்னணியில் உள்ளது ஆனால் தங்கம் மிக அதிக அளவில் இருப்பு வைத்துள்ள நாடுகளில் 10-வது இடத்தில் இந்தியா உள்ளது. இத்தகவலை வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

தங்கத்தின் இருப்பு அளவை அதிகரித்துக் கொள்ள சமீபத்தில் அன்னியச் செலாவணி நிதியத்திடமிருந்து (ஐஎம்எப்) 200 டன் தங்கத்தை இந்தியா வாங்கியது. இதனால் இந்தியாவில் தங்கத்தின் இருப்பு தற்போது 557.7 டன்னாக உயர்ந்துள்ளது. நாட்டில் கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணியில் தங்கத்தின் இருப்பு 6 சதவீதமாகும். 1991-ம் ஆண்டு சந்திரசேகர் பிரதமராக இருந்தபோது, இறக்குமதி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அப்போதைய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா பரிந்துரையின்பேரில் 200 டன் தங்கம் பிரிட்டனிடம் அடமானம் வைக்கப்பட்டது.

No comments: