Feb 25, 2010

பசுவதைத் தடைச்சட்டம்: கர்நாடகா அரசுக்கெதிராக கண்டன பேரணி.


பெங்களூர்:பசுவதைத் தடைச்சட்டத்தை கொண்டுவர தீர்மானம் எடுத்திருக்கும் கர்நாடகா அரசின் பாசிசப் போக்கை கண்டித்து தங்களது கண்டனங்களை வெளிப்படுத்தும் வகையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு சமூக நலன் கொண்ட அமைப்புகள் பெங்களூர் கண்டனப் பேரணியொன்றை நடத்தின. இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா, கர்நாடகா மாட்டு இறைச்சி வியாபாரிகள் சங்கம், கர்நாடகா கோமு சவ்ஹார்த வேதிக, திப்பு ஐக்கிய முன்னணி, ஸ்டீஃபன்ஸ் ஸ்கொயர் வியாபாரிகள் சங்கம், ப்ரஜா விமோச்சன சலுவாலி, கர்நாடகா தலித் சங்கர்ஷ் சமிதி,சமதா சைனிக் தல் ஆகியன பங்கேற்றன.

கண்டனப் பேரணி அரசுக்கலைக் கல்லூரியிலிருந்து துவங்கி பன்னப்பா பூங்காவில் நிறைவுற்றது. இந்த கண்டனப் பேரணியில் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த உறுப்பினர்கள் திரளாக கலந்துக் கொண்டனர். இதனால் பெங்களூர் நகரம் சில மணிநேரம் ஸ்தம்பித்தது.

No comments: