Jan 7, 2010

சூரிய குடும்பத்திற்கு வெளியே 5 கிரகங்களை கண்டுபிடித்தது நாசா


ப்ளோரிடா:அமெரிக்காவின் விண்வெளி மையமான நாசாவின் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி சூரிய குடும்பத்திற்கு வெளியேயுள்ள 5 கிரகங்களை கண்டறிந்துள்ளது.

பூமிக்கு சமமான பிற கிரகங்களை கண்டறிவதற்காக கடந்த மார்ச் மாதத்தில் நாசா கெப்ளர் விண்வெளி தொலைநோக்கியை நிறுவியது. ப்ளோரிடாவில் கேப் கனாவரல் ஏர்ஃபோர்ஸ் நிலையத்திலிருந்துதான் கெப்ளர் விண் தொலைநோக்கி விண்வெளியில் செலுத்தப்பட்டது.

கெப்ளர் 4பி, 5பி,6பி,7பி,8பி என கண்டறியப்பட்டுள்ள கிரகங்களுக்கு பெயரிடப்பட்டுள்ளது. வாஷிங்டன் டி.சி யில் நடைபெற்ற அஸ்ட்ராணமிக்கல் சொசைட்டி கூட்டத்தில் வைத்து இதன் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. பூமியை விட நான்கு மடங்கு பெரிதான சூரிய குடும்பத்திலிலுள்ள வியாழன் கிரகத்தை விட பெரிய கிரகமும் இதில் அடங்கும். ஒவ்வொரு கிரகத்திற்கும் அவற்றின் நட்சத்திரத்திற்கும் இடையேயான தொலைவு பூமியிலிருந்து சூரியனுக்குள்ள தூரத்தை விட குறைவாகும்.அதனால் கெப்ளர் கிரகங்கள் பூமியைவிட வெப்பமிகுதியானதாகும்.

பூமிக்கு சமமான இக்கிரகங்கள் நட்சத்திரத்திற்கு அருகிலிருப்பதால் இவற்றில் ஏதேனும் உயிர்கள் வாழ்வதற்கு வாய்ப்பிருப்பதாகவும் நாசா ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மேலும் இவற்றில் தண்ணீர் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஒரு லட்சத்திற்குமேற்பட்ட கிரகங்களையும் அவற்றிற்கு அருகிலிலுள்ள கிரகங்களையும்தான் கெப்ளர் ஆய்வுச்செய்தது. பூமிக்கு சமமான கிரகங்களைப்பற்றிய ஆய்வுகள் பல ஆண்டுகள் நீடிக்கும் என நாசா அறிவித்துள்ளது.

No comments: