அஹ்மதாபாத்:குஜராத் மாநிலத்திலிலுள்ள கோத்ராவில் முஸ்லிம் பெண்களை காவல்துறை கொடூர சித்திரவதைக்குள்ளாக்கியதாக சிட்டிசன் ஃபார் ஜஸ்டிஸ் அண்ட் பீஸ் என்ற அமைப்பு வெளிப்படுத்தியுள்ளது.
இது சம்பந்தமாக விசாரித்து அறிக்கையை சமர்ப்பிக்க கோத்ரா முதல் வகுப்பு ஜூடிசியல் மாஜிஸ்ட்ரேட் மூத்த போலீஸ் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார். போலீஸ் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களை இவ்வமைப்பின் செயலாளர் தீஸ்டா செடல்வாட் நேற்று பத்திரிகையாளர்களுக்கு முன்னால் ஆஜர்படுத்தினார். சச்சரவில் ஈடுபட்டார்கள், காவல்துறையினர் மீது கல்லெறிந்தார்கள் என்று குற்றஞ்சாட்டி கைதுச்செய்த பெண்களை வீட்டில் வைத்தும், காவல்நிலையத்தில் வைத்தும் சித்திரவதைக்கு ஆளாக்கியுள்ளனர். மேலும் அவர்களை கற்பழித்துவிடுவதாக பயமுறுத்தியுள்ளனர். பின்னர் இவர்களை ஜாமீனில் வெளியே விட்டுள்ளனர்.
தன் தாயின் மடியிலிருந்த 19 நாளே ஆன குழந்தையைக்கூட கீழே தூக்கியெறிய அவர்கள் தயங்கவில்லை என அவர் கூறுகிறார். பின்னர் சச்சரவு, போலீஸ் மீது கல்லெறிந்தார்கள் என்று குற்றஞ்சாட்டி 8 பெண்களை கைதுச்செய்துள்ளனர். அதிகாலை 4 மணியளவில் கோத்ரா சப்-ஜெயிலுக்கு கொண்டுச் சென்றுள்ளனர். செல்லும் வழியில் போலீஸ் வேனில் வைத்தும் அவர்களை உடல் ரீதியாக சித்திரவதைக்கு ஆளாக்கியுள்ளனர்.ஆண்கள் அவரகளது அன்றாட வாழ்க்கைக்கு தேவையானவற்றை சம்பாதிக்க இயலாத நிலை உள்ளது. நகரின் வெளிப்பகுதியில் வசிக்கும் பல குடும்பங்கள் போலீஸின் தொந்தரவிற்கு பயந்துபோய் உள்ளனர். இது சம்பந்தமாக பல முறை அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment