Dec 15, 2009

140 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கடலில் மிதந்து வரும் ராட்சத பனிக்கட்டி

கடலில் மிதந்து வந்த ராட்சத பனிக்கட்டி ஒன்றில் டைட்டானிக் கப்பல் மோதி மூழ்கியது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

இப்போது இதே போல பல மடங்கு பெரிய பனிக்கட்டி ஒன்று ஆஸ்திரேலியா அருகே மிதந்தபடி வருகிறது. ஆஸ்திரேலியா மேற்கு கடற்கரையில் இருந்து 1700 கிலோ மீட்டர் தூரத்தில் மிதந்தபடி வடக்கு நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அன்டார்டிகா பனிப்பாறைகளில் இருந்து பிரிந்து இது வந்துள்ளது.

இதை நாசா மற்றும் ஐரோப்பிய யூனியன் செயற்கை கோள்கள் படம் பிடித்து உள்ளன. இது 140 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ளது. கடலுக்கு மேலே 50 மீட்டர் உயரத்தில் பிரமாண்டமாக இருக்கிறது. அமெரிக்காவில் நியூயார்க் நகரம் அமைந்துள்ள மான் ஹாட்டன் தீவை விட இந்த பனிக்கட்டி 2 மடங்கு பெரியதாக இருக்கிறது.

பனிக்கட்டியில் கப்பல் மோதி விடக்கூடாது என்பதற்காக இந்த பகுதியில் செல்லும் அனைத்து கப்பல்களுக்கும் எச்சரிக்கை அனுப்பி உள்ளனர். பனிக்கட்டி மெல்ல, மெல்ல உருகி கரைந்து விடும். இதற்கே 2 வாரத்துக்கு மேல் அல்லது ஒரு மாதம் வரை கூட ஆகலாம் என்று கணித்து உள்ளனர்

No comments: