Nov 14, 2009

ஆர்.எஸ். எஸ். தீவிரவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக உண்டாகியதே லவ் ஜிஹாத்"


ஹிந்து பெண்களை காதலித்து மதம் மாற்றுவதாக குற்றஞ்சாட்டப்படும் "லவ் ஜிஹாத்" என்ற பிரச்சாரத்திற்கு ஆதாரமில்லை இதை முஸ்லிம்களுக்கு எதிராக உண்டாகியதே ஆர்.எஸ். எஸ். தீவிரவாதிகள்தான் என்று கர்நாடகா காவல்துறை கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.காவல் துறை அறிக்கையின் படி மைசூரில் வசித்து வரும் மலையாளியான ஸில்ஜா ராஜை அவருடையை கணவர் கண்ணூரைச்சார்ந்த அஸ்கரோடு செல்ல கர்நாடகா உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.

கர்நாடகா சிறப்பு புலனாய்வுக்குழு அளித்த அறிக்கையில்தான் "லவ் ஜிஹாத்" என்ற பிரச்சாரத்திற்கு எந்தவொரு முக்கிய ஆதாரமுமில்லை என கூறியுள்ளது. நீதிபதிகளான கெ.ஸ்ரீதர் ராவ், ரவி பி மல்லிமர் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் தீர்ப்பு வழங்கியது.
கடந்த மாதம் அக்டோபர் 21 ஆம்தேதி சமர்ப்பிக்கப்பட்ட ஆள் கொணரும் மனுவை பரிசீலித்த உயர் நீதிமன்றம் "லவ் ஜிஹாத்" பற்றி விசாரிக்க கர்நாடகா, கேரளா காவல்துறையினருக்கு உத்தரவிட்டது.

கேரளாவில் இத்தகைய செயல்பாடுகள் ஒன்றுமில்லை என்று கேரள மாநில டி.ஜி.பி ஜேக்கப் பூணூஸ் ஏற்கனவே கேரள நீதிமன்றத்தை அறிவித்துள்ளார். கர்நாடகா சி.ஐ.டி நேற்றுதான் தனது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அதே நேரத்தில் "லவ் ஜிஹாதை" பற்றி மேலும் விசாரணை மேற்கொள்ள 2 மாதம் அவகாசத்தை சி.ஐ.டி கோரியதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இது சம்பந்தமாக வருகிற ஜனவரி 18 ஆம்தேதி நீதிமன்றம் பரிசீலிக்கும்.
தனது மகளை மதமாற்றுவதற்காக அஸ்கர் காதலிப்பதாகவும், இது அயல்நாட்டு உதவியுடன் கூடிய "லவ் ஜிஹாதின்" ஒரு பகுதி என ஸில்ஜாவின் தந்தை செல்வராஜ் நீதிமன்றத்தில் அளித்த மனுவில் குற்றஞ்சாட்டியிருந்தார். ஆகஸ்ட் எட்டாம் தேதி மகளை காணவில்லை என்றும், 15 ஆம் தேதி திருமணம் செய்ததாக அஸ்கர் அறிவித்ததாகவும் குற்றச்சாட்டில் கூறப்பட்டிருந்தது. இது சம்பந்தமாக ஸில்ஜா(தற்போதைய பெயர் நஸ்ரின்) கூறியதாவது; கணவருடன் செல்ல என்னை அனுமதித்த நீதிமன்ற உத்தரவு எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அஸ்கரை திருமணம் செய்ய எவரும் என்னை வற்புறுத்தவில்லை. நான் அஸ்கரை விரும்பியே திருமணம் முடித்தேன்.இவ்வாறு நஸ்ரின் பத்திரிகையாளர்களோடு தெரிவித்தார்.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

No comments: