கொடுக்கா புளி ஜனவரி மாதம் தொடங்கி மே மாதம் வரை காய்க்கும். கொடுக்கா புளி இலைகளை பயன்படுத்தி செரியாமை, வயிற்று புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: கொடுக்கா புளி இலைகள், பூக்கள், நாட்டு சர்க்கரை, சீரகம், மிளகுப் பொடி. ஒருபிடி இலை மற்றும் பூ எடுத்துக் கொள்ளவும். இதனுடன் சிறிது மிளகுப் பொடி, கால் ஸ்பூன் சீரகம், நாட்டு சர்க்கரை சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி அல்சர் உள்ளவர்கள் குடித்துவர நல்ல பலன் தரும். வயிற்றுப்புண் வராமல் தடுக்கிறது. வயிற்று கடுப்பு குணமாகும். செரிமானத்தை சீர் செய்யும். சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. வாயு கலைந்து வயிற்று வலி போகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
கொடுக்கா புளியின் சதை பகுதியை பயன்படுத்தி பற்கள், மூட்டுகளை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கொடுக்கா புளி, உப்பு, மிளகுப் பொடி. கொடுக்கா புளியின் மேல் தோலை நீக்கி சதை பகுதியை 15 வரை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் சிறிது மிளகுப் பொடி, உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்துவர பல் வலி குணமாகும். பற்களுக்கு பலம் கொடுக்கும்.
எலும்புகளை பலப்படுத்தும். மூட்டு வலி சரியாகும். ரத்த சோகையை போக்க கூடியது. ஊக்கம் தரக்கூடிய சத்துக்களை உடையது. கொடுக்கா புளி இலைகளை பயன்படுத்தி மூட்டு வலிக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் எடுத்துக் கொள்ளவும். கொடுக்கா நீர் விடாமல் அரைத்த புளி இலை பசையை சேர்த்து நன்றாக வதக்கவும்.
மேல்பூச்சாக போடும்போது மூட்டு வலி குணமாகும். வீக்கம் கரைந்து, வலி குறையும். கொடுக்கா புளியின் இலைகள் பால்வினை நோய்களுக்கு மருந்தாகிறது. கோண புளியங்காய் என்ற பெயரை கொண்ட இதன் சதை பகுதி எலும்பு, பற்களுக்கு பலம் தரக்கூடியது.

No comments:
Post a Comment