ஆகஸ்ட் 19/14: இந்தியா ஹிந்து தேசம். ஹிந்துத்துவா அதன் அடையாளம்” என்று RSS இயக்கத் தலைவர் மோகன் பாகவத் அறிவீனமான பேச்சால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
மும்பையில் கிருஷ்ண ஜெயந்தி நாளான ஞாயிற்றுகிழமையன்று நடைபெற்ற விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் பொன் விழாவில் மோகன் பாகவத் பேசியதாவது: இங்கிலாந்தில் வசிப்போர் ஆங்கிலமும், ஜெர்மனியில் வசிப்போர் ஜெர்மனியர்களாகவும், அமெரிக்காவில் வசிப்போர் அமெரிக்கர்களாகவும் இருக்கும்போது, இந்தியாவில் வசிப்போர் ஹிந்துக்களாக ஏன் இருக்க முடியாது? என்றார்.
இவரது அதி மேதாவித்தனத்தை என்னவென்று சொல்வது. அமெரிக்காவில் இருப்பவர்கள் தங்களை தங்களது நாட்டின் பெயரால் அமெரிக்கர்கள் என்று அலைகின்றது சரியே. அவர்கள் தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்து கொண்டால் மோகன் பகத் சொல்வது சரிதான்.
இந்தியாவில் வாழும் மக்களை இந்தியர்கள் என்றே அழைக்க முடியும், மாறாக மோகன் பகத் சொல்வது போல் ஹிந்துக்கள் என்று அழைக்க முடியாது. அமெரிக்காவில் எல்லா மதத்தினரும் வசிக்கின்றனர். அனைத்து மதத்தினரும் அமெரிக்காவில் சமாக நடத்தப்படுகின்றனர். அதுபோல் இந்தியாவில் நடக்கிறதா?
No comments:
Post a Comment