Aug 23, 2014

மோடியின் மகுடிக்கு தலையாட்டும் நீதித்துறை!

தனக்கு திருமணமான விவரத்தை, நரேந்திர மோடி 2012ஆம் ஆண்டு தாக்கல் செய்த வேட்பு மனுவில் குறிப்பிடாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், குஜராத் அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று அஹ்மதாபாத் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜி.என். ராணா வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
மோடி செய்த கலவரங்களை பற்றி இதுவரையில் எந்த நீதி மன்றமும் சரியான முறையில் வாய் திறக்கவில்லை. மோடி மீது தொடரப்பட்ட  பல்வேறு வழக்குகளில்  தக்க சாட்சியங்கள் இருந்தும் நீதிமன்றங்கள் வாய்மூடி மவுனம் காத்தன அல்லது மோடிக்கு ஆதரவாக செயல்பட்டன. 
ஆனால் இதுபோன்று உப்பு சப்பு இல்லாத விசயங்களை கையிலெடுத்து கொண்டு நன்றாக நடிக்கின்றன. மோடிக்கு திருமணம் ஆனால் என்ன ஆகாவிட்டால் என்ன? இதில் என்ன முக்கியத்துவம் இருக்கிறது. இந்த வழக்கு மோடியை பாதிக்காது என்று தெரிந்ததும் அதில் ஏதோ நீதி செலுத்துவது போல் நாடகம் ஆடுகின்றனர். மோடி பாம்பாட்டி இசைக்கிற மகுடிக்கு தலையாட்டும் பாம்புகள்தான் இந்த நீதிபதிகள். 

No comments: