Sep 29/2013: UP முஸஃபர் நகர் மாவட்டத்தின் கல்யாண்பூர் கிராமத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை POPULAR FRONT OF INDIA இயக்கம் துவங்கியது.
இந்நிகழ்ச்சியில், கலவரத்தால் பாதிக்கப்பட்டு குடியமர்த்தப்பட்ட மக்கள் மற்றும் சமூக தலைவர்கள் POPULAR FRONT OF INDIA தேசிய பொது செயலாளர் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இரண்டு போர்வைகள், இரண்டு பக்கெட்கள், மற்றும் வீட்டிற்குத் தேவையான உபயோகப் பொருட்கள் ஆகியவை நிவாரணப் பொருட்களாக அந்த கிராமத்தில் உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன. இந்த வாரத்தில் முதற்கட்டமாக பிற பகுதிகளிலிருந்து இங்கு இடம் பெயர்ந்து வந்து பல்வேறு நிவாரண முகாம்களிலும், வீடுகளிலும் தங்கியுள்ள 14 கிராமத்தின் 3000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும்.
“மனிதத் தன்மையற்ற எதிரிகளால் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பலியாக்கப்பட மக்களுக்கு எங்கள் கடமையை செய்கின்றோம். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்று தருவதில் பாப்புலர் ஃப்ரண்ட் முன்னணி இயக்கமாக செயல்பட்டு வருகிறது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் இந்திய அரசியல் அமைப்பு வழங்குகின்ற நீதியைப் பெற்றுத் தருவோம், தேவையான சட்ட ரீதியான உதவிகள் மற்றும் வேறுபட்ட இரு சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமை ஏற்படுத்துவோம். இந்நிகழ்ச்சியில் POPULAR FRONT OF INDIA உத்திர பிரதேச மாநிலத் தலைவர், மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
3 comments:
nalla pani...
நிவாரணப் பணிகளுக்கு பாராட்டுக்கள்
nalla pani paaraattukkal
Post a Comment