Feb 2, 2013

திசை திரும்பும் விஸ்வரூபம்! நடப்பது என்ன?

பிப்/03/2013: விஸ்வரூபம் தொடர்பாக சென்னை தலைமைச்செலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. அதில் லேப்டாப் மூலம் படத்தை திரையிட்டார் கமல்.  

முஸ்லீம் தரப்பில் பேசியவர்கள்  படத்தில் 15 இடங்களில் கத்தரி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இறுதியாக 9 இடத்தில் கத்தரி போட கமல் சம்மதித்தார். இதையடுத்து விஸ்வரூபத்திற்கு தடை நீங்கியது.

இந்நிலையில் தமிழ்நாடு பிராமணர் சங்க தலைவர் ராமகிருஷ்ணன் இன்று சென்னை போலீஸ் கமிஷனரிடமும், உள்துறை செயலாளரிடமும் ஒரு புகார் மனு கொடுத்திருக்கிறார். படத்தின் கதாநாயகி பிராமணப் பெண். அவருக்கு கமல் சிக்கன் சமைத்துக் கொடுப்பதுபோல் காட்சி வருகிறது. இதனால் படத்தை தடை செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இது கமலின் மீதான வெறுப்பின் அடிப்படையிலோ அல்லது முஸ்லிம்களின் நியாயமான கோரிக்கையை கொட்ச்சைபடுத்தும் நோக்கிலோ கொடுக்கப்பட்ட புகாரே ஆகும். பிரச்சனை முடிவுக்கு வரும் வேளையில் சொல்லப்படும் இந்த புகார் உள்நோக்கம் கொண்டது. பிராமணர்களில் பெரும்பான்மையினர் மீன், கறி, கோழி என்று அசைவத்தில் புகுந்து விளையாடுகிறார்கள். 

முஸ்லிம் மதத்தில்  குடிக்க கூடாது! ஆனால், அங்கும் கொஞ்ச பேர் குடிக்கிறார்கள். விக்ரம் நடித்த சாமி படத்தில் கூட பீர் பாட்டலோடு ஆடும் காட்சியில் முஸ்லிம் ஒருவர் தலையில் தொப்பி வைத்து கொண்டு ஆடுவார். இதை எல்லாம் யாரும் பெரிசா பேசியது இல்லை. ஆனால், விஸ்வரூபம் படத்தில் நடந்ததோ வேறு நேரடியாக வழிப்பாட்டு முறைகளை கொட்ச்சை படுத்துவதோடு, அவற்றை தீவிரவாதத்தின் அடையாளமாக காட்ட நினைத்ததே இங்கே பிரச்னைக்கு மூல காரணம்.

தலித், மற்றும் பிற்படுத்தபட்ட மக்களோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் பிராமணர்களை உயர்வாக தூக்கிப்பிடித்தே காலம் காலமாக தமிழ் சினிமாக்களில், நாடகங்களில் காட்டப்படுகிறது.  பெரும்பான்மையான படங்களில் வரும் வசனங்கள் கூட பிராமண சமூகத்து பேச்சு நடையிலேயே இருக்கும்.  தமிழர் கலாச்சாரம், பண்பாடு இவைகளை காட்டியதை விட உயர்சாதியை தூக்கி பிடிப்பதில் சினிமா மற்றும் ஊடகங்கள சிறப்பாக செயல்பட்டன. மற்றபடி விஸ்வரூபம் படபிரச்சனையை திசை திருப்ப முயல்வது முறையல்ல! 

9 comments:

நிலாமகள் said...

சரிதான். எல்லா சாதி மத அமைப்புகளுக்கும் போராட்டம் ஒரு பொழுது போக்கு ஆகிப் போனது.

Anonymous said...

only you are having the right for agitation. not others.
i never saw you condeming taliban
, LET, JuD, IM.
YOU ARE HAVING RIGHT TO SUPPORT ANY ORGANISATION. BUT DONT SAY YOU ARE NEUTRAL.

Anonymous said...

ஆப்கனில் நடக்கும் விஷயங்களை கூறும்போது, இங்குள்ளவர்களைக் காயப்படுத்துகிறது என்பதை ஏற்றுக்கொள்ளும்போது, இதை ஏன் நீங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது ? அவரது கலாச்சாரத்தை இழிவுபடுத்துகிறது என்பதை கூற அவருக்கு உரிமை இல்லையா ?

PUTHIYATHENRAL said...

வணக்கம் அனானி நண்பரே! நலமா! never saw you condeming taliban! தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை ஆறரை கோடி, இந்தியாவின் மொத்த மக்கள் தொகை நூறு கோடியை தாண்டி விட்டது. நமக்கு பேச நிறைய விசயங்கள் நமது நாட்டில் இருக்கிறது. இதையும் தாண்டி பேச நினைத்தால் நமது மொழி, கலாச்சாரம் சார்ந்த உறவுகள் ஈழத்திலே இருக்கிறார்கள், உலகம் முழுவதும் பல நாடுகளில் இருக்கிறார்கள். இதை பற்றி பேசவே நமக்கு முடிவதில்லை. ஆப்கனிஸ்தானை ராமன் ஆண்டாள் என்ன? ராவனனர் ஆண்டாள் என்ன?

நாங்கள் என்ன தினமணி, தினமலர், இந்தியா டுடே மாதிரியா, வேலை வெட்டி இல்லாமல் ஆப்கானித்தான், அல்கொய்தா என்று எழுதி கொண்டிருக்க. தமிழில் ஆப்கானிஸ்தான் பற்றி எழுதுவதால் இதை தலிபான்கள் படிக்க போகிறார்களா? அல்லது ஆப்கானிஸ்தான் மக்கள்தான் படிக்க போகிறார்களா? அல்லது அதை எழுதி இங்கே உள்ளவர்கள் படித்து ஏதாவது செய்யப்போகிறார்களா?

PUTHIYATHENRAL said...

//YOU ARE HAVING RIGHT TO SUPPORT ANY ORGANISATION. BUT DONT SAY YOU ARE NEUTRAL. //

வணக்கம் அனானி நண்பரே நலமா! நாங்கள் எந்த இயக்கத்திற்கும் சப்போர்ட் பண்ண வில்லை. அதுபோல் உங்களை சப்போர்ட் பண்ண கூடாது என்றும் நாங்கள் சொல்ல வில்லை. இங்கே பொது பிரச்சனைகளை, மக்கள் பிரச்சனைகளை பற்றியே எழுதுகிறோம். இதில் யாரையும் சார்ந்தோ, வெறுத்தோ எழுதவில்லை. எங்களை நடுநிலையாளர்கள் இல்லை என்று ஆதாரமற்ற குற்றச்சாட்டை சொல்லும் நீங்கள்தான் அதை நிருபிக்க கடமை பட்டுள்ளீர்கள். ராமனுக்கு தன்னை கற்ப்புக்கரசி என்று காட்ட சீதை தீக்குளித்தது போல் எங்களால் தீக்குளிக்க முடியாது.

புனிதப்போராளி said...

ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நன்மக்கள் அனைவர்களின் மீதும் உண்டாவட்டுமாக.........,சினிமா என்ற மீடியாவை சமுக நல்லிணக்கத்துக்காக பயன்படுத்துவதை விட்டுவிட்டு தொடர்ந்து ஒருசமுதாயத்தை தீவிரவாதிகளாக சித்தரிக்கின்றது..,, தமிழனுக்கான நீதிகள் மறுக்கப்படும் சூழ்நிலையில் மக்கள் அல்லல்படும்பொழுது தமிழன் கொல்லப்படுவதை கண்டும் இதையொரு படமாக எடுக்க துப்பில்லாதவர்களாக இருக்கின்றார்கள் தமிழ்சினிமா கூத்தாடிகள் [ சாணியைகரைத்து தமிழர்கள் அடிக்காதவரை தமிழ்திரையுலகினர் திருந்தமாட்டார்கள் ];;;;;;;;by ....புனிதப்போராளி

புனிதப்போராளி said...

ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நன்மக்கள் அனைவர்களின் மீதும் உண்டாவட்டுமாக.........,சினிமா என்ற மீடியாவை சமுக நல்லிணக்கத்துக்காக பயன்படுத்துவதை விட்டுவிட்டு தொடர்ந்து ஒருசமுதாயத்தை தீவிரவாதிகளாக சித்தரிக்கின்றது..,, தமிழனுக்கான நீதிகள் மறுக்கப்படும் சூழ்நிலையில் மக்கள் அல்லல்படும்பொழுது தமிழன் கொல்லப்படுவதை கண்டும் இதையொரு படமாக எடுக்க துப்பில்லாதவர்களாக இருக்கின்றார்கள் தமிழ்சினிமா கூத்தாடிகள் [ சாணியைகரைத்து தமிழர்கள் அடிக்காதவரை தமிழ்திரையுலகினர் திருந்தமாட்டார்கள் ];;;;;;;;by ....புனிதப்போராளி

SNR.தேவதாஸ் said...

எண்ணிக்கையில் மிகவும் குறைவாக இருக்கும் இவர்களைத்தானே ஐயா வலைப் பதிவாளர்கள் அனைவரும் போட்டுத் தாளித்துக்கொண்டு இருக்கிறீர்கள்.பதிவாளர்கள் அனைவரும் அவர்களது மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்.தங்களது மனங்களில் ஜாதி,மதம் இல்லையா என்று.ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தானே மாற்றிக்கொண்டால் போதும் ஜாதியும் மதமும் போயே போச்சு.இட்ஸ் கான்ட்,போயிந்தி
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்

ruban said...

"முஸ்லிம் மதத்தில் குடிக்க கூடாது! ஆனால், அங்கும் கொஞ்ச பேர் குடிக்கிறார்கள். விக்ரம் நடித்த சாமி படத்தில் கூட பீர் பாட்டலோடு ஆடும் காட்சியில் முஸ்லிம் ஒருவர் தலையில் தொப்பி வைத்து கொண்டு ஆடுவார்"
"அப்பம் புகை பிடிக்கலாமா" ரொம்ப comedy பணதிங்க...