Jan 30, 2013

கருணாநிதியின் விஸ்வரூபம்! தாங்குமா தமிழகம்!

ஜனவரி 30: விஸ்வரூபம் படத்தினை வெளியிட மீண்டும் தடை. உச்ச நீதிமன்ற பெஞ்ச் உத்தரவு. 

இதை தொடர்ந்து,  விஸ்வரூபத்தை அரசியல் ஆக்குகிறார் கருணாநிதி. இவரை மாதிரி ஒரு கேவலமான அரசியல் தலைவரை தமிழகம் கண்டிருக்காது என்றே சொல்லாம்.

விஸ்வரூபம் படத்தை ஜெயலலிதா தடை செய்ததற்கு கமல், சிதபரத்தை பிரதமர் ஆகவேண்டும் என்று சொன்னார், ஜெயா டிவிக்கு விஸ்வரூபத்தை தர மறுத்தார், இப்படி பல காரணங்களை சொல்கிறார் இந்த அரசியல் கோமாளி.

பிரச்சனைகள் வந்து விட கூடாது என்று படத்தை  தடை செய்த தமிழக அரசை கேலி செய்யும் இவர், கோயம்புத்தூர் கலவரம் நடக்கும் பொழுது நான் மூன்று நாட்களாக முதல்வர் பதவியிலேயே இல்லை என்று சொன்னவர்தான் அந்த அளவுக்கு திறமையான ஆட்சியாளர்.

கருணாநிதி பண்ணுகிற மட்டமான அரசியலில் நடுத்தெருவுக்கு வரப்போவது என்னவோ கமல்தான். இதை, இவர் புரிந்த கொண்ட மாதிரி தெரியவில்லை. மேலும் ஏழரையை கூட்டுகிறார். தமிழகத்தை விட்டு வெளியேற போகிறேன், மதச்சார்பில்லாத மாநிலத்துக்கு போக போறேன் என்று சொல்வது, ரசிகர்களை வைத்து அனுதாபம் தேடுவது போன்றவற்றை விட்டு விட்டு உருப்படியான தீர்வை காண முன்வரவேண்டும்.

கமலஹாசன் என்கிற தனி நபர் புகழுக்கும், பணத்திற்கும் ஆசைப்பட்டு இந்தியாவில் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு என்று பல்வேறு வகைகளில் புறக்கணிக்கப்பட்ட ஒரு சமூகத்தை, மேலும் புண்படுத்தும் வகையில் படம் எடுத்து சமூக அமைதியை குலைக்க நினைப்பது சரியா? தான் செய்த தவறை உணர்ந்து அதற்க்கான பரிகாரத்தை செய்ய கமல் முன்வர வேண்டும். இதுவே உண்மையாக பிரச்னையை தீர்க்க உதவும்.

சும்மா கருத்து சுதந்திரம், கத்திரிக்காய் என்று பேசி விட்டு தங்களுக்கு பாதகமான விசயம் வரும் பொழுது அதை காற்றில் பறக்க விடுவதை விட நடு நிலையாக இந்த விஷயத்தை பார்ப்பதே சரியான அணுகுமுறை. கமல் ஹாசன் தனி நபர், அவர் செய்வது வியாபாரம். ஆனால் அவர் தாக்குவதோ ஒரு சமூகத்தை. அந்த சமூகத்திற்கு இது வியாபாரம் இல்லை நம்பிக்கை சார்ந்த விஷயம். நமது கருத்து சுதந்திரம் என்பது அடுத்தவர்களின் மூக்கு நுனிவரைதான் என்பதை கமல் புரிந்து கொள்ள வேண்டும்.

தலிபான் தலைவர் உமர், மதுரையிலும், கோவையிலும் தங்கி இருந்தார் என்று சொல்லும் கருத்து விசமத்தனமான, உள்நோக்கம் கொண்டது. இதன் மூலம் மதுரை, கோவை முஸ்லிம்களை தீவிரவாதத்தோடு தொடர்பு படுத்துகிறார். மேலும் உமர் பச்சிளம் பாலகனாகிய தன் மகனிடம் பல்வேறு ரக துப்பாக்கிகளின் தோட்டாக்களை ஒரு துணியில் மறைத்து ஒன்றன் பின் ஒன்றாக காட்டுவதும் அதை அந்த பட்சிளம் பாலகன் தடவிபார்த்து, அது எந்த ரகத்தை சேர்ந்த தோட்டா என்று சரியாக சொல்வதும் ஆகிய இந்த கருத்து, சிறுவர்களை தீவிரவாதியாக சித்தரிக்கும் ஊடக பயங்கரவாதம். 

முஸ்லிம்களே சொல்கிறார்கள் தலிபான், லஸ்கர் பற்றி கமல் படம் எடுக்கட்டும் அதை பற்றி கவலை இல்லை. ஆனால் அதில் ஏன் முஸ்லிம்களின் வழிபாடுகளை, நம்பிக்கைகளை அவமதித்து எடுக்க வேண்டும் இதுவே அவர்களது கேள்வி. இதில் சிலர் சென்சார் போர்ட் அனுமதி கொடுத்து விட்டால் படத்தை தடுப்பது முறையில்லை என்கின்றனர். ஏதோ நாமெல்லாம் லஞ்சம் இல்லாத நாட்டில் வாழ்வதாக அவர்களுக்கு நினைப்பு. பிச்சை காசை தூக்கி எறிந்தாலே சென்சார் போர்டு வாலாட்டும், நூறு கோடி செலவில் எடுக்கப்பட்ட பெரிய பட்ஜெட் படத்திற்கு கேட்கவா வேண்டும். 

கருணாநிதி, ராமதாஸ், விஜயகாந்த் என்கிற வெத்துவேட்டுகளை நம்பி ஏமாறாமல் படத்தில் இருக்கும் ஆட்சேபணைக் குரிய கருத்துக்களை நீக்கி வெளியிடுவதே கமலுக்கு நல்லது.

சமூக ஒற்றுமை என்பது கண் போன்றது! கண்ணை விற்று வியாபாரம் செய்யாதீர்கள்! என்பதே நமது அன்பான வேண்டுகோள்!

10 comments:

Anonymous said...

miha arumayana karruthu

Easy (EZ) Editorial Calendar said...

ஆனால் பல முஸ்லீம்கள் ஏற்கனவே படத்தை பார்த்து விட்டு நல்ல கருத்தை தான் சொல்லி இருக்கிறார்கள்.....எது உண்மை என்றே தெரியவில்லை....முதலில் நான் பார்த்துவிட்டு சொல்றேன்.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Anonymous said...

"விக்ரம்' திரைப்படத்தின் சிறப்புக் காட்சி ஒன்றில், எம்.ஜி.ஆர்., கலந்து கொண்ட போது, ஜெயலலிதா, தன் கைப்பட, எம்.ஜி.ஆருக்கு ஒரு கடிதம் எழுதினார்.அதில், "கமலின், விக்ரம் படத்தின் நிதி சேர்க்கும் சிறப்புக் காட்சியில், நீங்கள் கலந்து கொள்ள சம்மதித்தும், உங்களை அவமானப்படுத்தும் விதத்தில், விளம்பரமே செய்யவில்லை. கமல் படம் ரிலீஸ் ஆன நாளன்று, ஒவ்வொரு நாளிதழிலும் முழு பக்க விளம்பரங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. தனக்காக, முழு பக்க விளம்பரம் கொடுக்க மட்டும் கமலுக்குத் தெரிகிறது. ஆனால், மக்கள் செல்வாக்கு உடைய, முதல்வரை அழைத்து விட்டு, விளம்பரமே செய்யவில்லை என்றால், கமல் உங்களை கிள்ளுக்கீரை என்றா நினைத்தார்' என்றெல்லாம் எழுதியதை, நினைவு கூர்ந்தால், எதற்காக இந்தத் தடை என, புரிகிறதா இல்லையா!இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

He is number on criminal

Anonymous said...

விஸ்வரூபம் திரைப்படம் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டதற்கு அரசியல் காரணமல்ல என்றும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாகவே படம் தடைப்பட்டுள்ளதாகவும், கமலஹாசன் அண்ணன் சந்திரஹாசன் தெரிவித்துள்ளார்.

surppaala adiththaalum thiruntha maattaar intha karunaanithi

அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் said...

விஸ்வரூபம் படத்திற்கு தடைவிதித்தது,ஜெயலலிதாவின்,ஆட்சிக்கு, வீழ்ச்சிக்கு போடப்பட்ட விதையாகும்.விதி இப்படித்தான் வேலை செய்யும்.இதை யாராலும் தடுக்க முடியாது.எந்த நோக்கமாக இருந்தாலும், எந்த கருத்துகளாக இருந்தாலும் அதுவெல்லாம் வாய் ஜாலங்கள் சாதி,சமயம்,மதம் என்பது ஒழிவதற்கு இதுவும் ஒரு காரணம்.இவை எதோ ஒரு ரூபத்தில்,இயற்கை என்னும் அருட்பெரும் ஜோதியின் விளையாட்டு .எதுவும் நன்மைக்கே .ஒரு ஆட்சி கவிழ வேண்டுமானால் எதோ ஒரு காரண காரியம் தேவைப்படுகிறது.அவை இப்போது நடந்து கொண்டு உள்ளது.கமலதாசனுக்கு நல்ல நேரம்,ஜெயலலிதாவுக்கு கேட்ட நேரம் ஆரம்பம் ஆகிவிட்டது.பொறுத்து இருந்து பார்ப்போம். எல்லாம் இயற்கையின் விளையாட்டு.மக்களால் எதையும் சாதித்துவிட முடியாது.இயற்கையால் எதுவும் நடக்கும். வள்ளலார் சொல்லியது அனைத்தும் நடந்து கொண்டு உள்ளது.எங்கே கருணை உள்ளன அங்கே விளங்கிய அருட்பெரும் ஜோதி .மக்கள் மீது அன்பும் கருணையும் உள்ள இடத்தில் நன்மையே நடக்கும்.சாதி,சமயம்,மதம் என்ற விஷம் நாட்டில் இருக்கக் கூடாது,என்று நினைக்கிறார் கமல்.அதில் தவறு ஒன்றும் இல்லை. இயற்கை அவர் பக்கம் நிலைத்து நிற்கும் ,வெற்றி பெறுவார் கமல்.கமல் புகழ் உலகம் எங்கும் பரவ வேண்டும் என்பது இயற்கையின் விருப்பம்.அவை நடந்தே தீரும் .

அன்புடன் ஆனமநேயன்.கதிர்வேலு.

புனிதப்போராளி said...

ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் சமுகப்போருப்போடு விஸ்வருபம் திரைப்படத்தை தடை செய்த தமிழக முதல்வர் அவர்களின் மிது உண்டாவட்டுமாக....கமலுக்கு வக்காலத்து வாங்கும் கதிர்வேலு ஐயா கருத்து சுதந்திரம் நடுநிலையுடன் இருக்கணும் ஆஸ்கர் விருதுக்காக ஒருசமுதாயத்தை தொடர்ந்து தீவிரவாதிகள் என்று சொல்லிவரும் கமல். மோடி, ஆர் எஸ் எஸ், போன்றவர்களின் பயங்கிரவாத்தை படமெடுக்க கமலுக்கு அண்டியில் பலமில்லையே இவர் முஸ்லிம்களைமட்டும் கொட்டிக்கொண்டு இருப்பார் முஸ்லிம்கள் குனிந்துகொண்டு போகணும் இனி அது நடக்க விடமாட்டோம்..கண்டிப்பாக கமல் போல் படமெடுப்பவனையும் கதிர்வேலு மாதிரியான கழுசடை[கருத்து] சுதந்திரம் பேசுபாவனையும் விட்டுவைக்கமாட்டோம்...by...புனிதப்போராளி

Anonymous said...

ullathai sonnal komali.nadanthai nadapathai than kamal eduthular ethai etherpavargal padathai pargamal irunthu etherpai katavendumae thavera vote bankuka thadi enpathu ematruvelai. next election etharku pathil sollum.

Anonymous said...

மசாலா மல்லு ஆண்டிகளையும் காமராசனின் காமங்களையும் தொடரும் கதிர்வேலு போன்றவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் !

balaa said...

ok good

Anonymous said...

கருத்து கண்ணப்பா உன்னை போன்ற கேனைகள் கோமாளிகள் உள்ளவரை எல்லாரும் கோமாளிகளாக தெரிவர் த்தூ