Jan 23, 2013

விஸ்வரூபம் கமலஹாசனின் பரிணாம வளர்ச்சி!

Jan 24: நடிகர் திலகம் சிவாஜி கணேஷனுக்கு அடுத்து, தமிழ் சினிமா உலகின் தலை சிறந்த நடிகராக கமலஹாசன் தனது நடிப்பு திறமையை பல்வேறு படங்களில் வெளிப்படுத்தியவர்.

உயர் ஜாதியை சேர்ந்த இவர், தன்னை கடவுள் மறுப்பாளராகவும், நடுநிலையாளராகவும், முற்போக்கு சிந்தனையாளராகவும் காட்டி கொண்டதன் மூலம், தமிழக மக்கள் பெரும்பான்மையினரின் நன்மதிப்பை பெற்ற நடிகர்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட பொழுது பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தவர். மும்பை கலவரத்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டது குறித்து கண்ணீர் விட்டு, அதற்காக அப்போதைய பிரதமர் நரசிம்மராவை சந்தித்து பேசியவர் என்று சிறுபான்மை மக்களின் நண்பனாக தன்னை காட்டி கொண்ட கமலிடம் சமீபகாலமாக ஏற்பட்டுள்ள மாறுதல்கள்.

மாறுதல்(1) ஹேராம் திரைப்படம்: இந்த படத்தில் முஸ்லிம் வெறியர்களால் தன் மனைவி கற்பழித்து கொல்லப்பட்டதால் தான் இந்து தீவிரவாதியாக மாற நேர்ந்ததாக ஒரு கருத்தை சொல்வார். இது உண்மைக்கு எதிரான திரிபுவாதம்  இந்தியாவில் நடந்த கலவரங்களில் இந்து பெண்கள் முஸ்லிம்களால் கற்பழிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்ததாக வழக்குகள் இல்லை. அதேநேரம் முஸ்லிம் பெண்கள் ஆர்.எஸ்.எஸ். பேன்ற ஹிந்துத்துவா இயக்கங்களால் கூட்டமாக கற்பழிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.

மாறுதல்(2): உன்னைப்போல் ஒருவன்: கோவை குண்டு வெடிப்பு சம்பவம் 1998ல் நடந்தது. குஜராத் கலவரம் 2002ல் நடந்தது. குஜராத் கலவரத்தில் முஸ்லிம் ஒருவருடைய மூன்றாவது மனைவி (வயது 16) உயிரோடு எரிக்கப்பட்டதால், அவர் பயங்கரவாதியாக மாறி கோவையில் குண்டு வைத்ததாக சொல்லியிருப்பார். இந்த மிகபெரிய வரலாற்று  புரட்டை கமலஹாசன் அறியாமல் செய்திருப்பார் என்று சொல்ல முடியவில்லை.

மாறுதல்(3) விஸ்வரூபம்: இந்த படத்தில் முஸ்லிமாக நடிக்கும் கமலஹாசன் தன்  மனைவியை வெளி நாட்டினருக்கு கூட்டி கொடுப்பார்.   அல்குரானை தீவிரவாதத்தை போதிக்கும் நுலாகவும், தொழுகை உட்பட முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகள் தீவிரவாதத்திற்கு ஊக்கம் அளிப்பதாகவும், கோவை, மதுரை போன்ற நகரங்கள் சர்வதேச தீவிரவாதிகளின் புகலிடம் போல சித்தரித்துள்ளார்.

இதுவரை முஸ்லிம்களை தீவிரவாதியாக சித்தரித்தவர் இப்பொழுது அவர்கள் பொண்டாட்டியை கூட்டி கொடுக்கும் அளவுக்கு ஒழுக்கம் கெட்டவர்கள்  ஆகவும், அவர்கள் புனிதமாக மதிக்கும் வேத நூல் குரானை அசிங்கப்படுத்தியும், இனி முஸ்லிம்கள் தொழுகைக்கு செல்வதை மாற்று மதத்தினர் தவறாக பார்க்கும் அளவுக்கு படத்தை எடுத்து பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறார். அர்ஜூன், விஜயகாந்த் படங்களை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு முஸ்லிம்கள் மீது வெறுப்பு உண்டாக்கியிருக்கிறார். இப்படி படம் எடுத்தது மட்டும்  இல்லாமல் இதற்க்கெல்லாம் தன்னிடம் ஆதாரம் இருக்கிறது என்று வேறு கூறியிருக்கிறார்.

இந்தியாவில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு வழக்கு  2010 ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு துறையிடம் ஒப்படைக்கப்பட்டு அதன் பின்னணியில் இருந்த ஹிந்துத்துவாவினர் கைது  செய்யப்பட்டதும்,  ஹிந்துத்துவாவினர் காடுகளில் பயிற்சி எடுத்த தீவிரவாத முகாம்களை தேசிய புலனாய்வு துறையினர் தேடிவருவதும் கமலுக்கு தெரியாதா? இந்த குண்டு வெடிப்புகளை நடத்தியது ஆர்.எஸ்.எஸ் ,பாரதிய ஜனதா கட்சி என்று உள்துறை அமைச்சர் குற்றம் சாட்டி உள்ள இந்நிலையில் கமலஹாசனின் இந்த முஸ்லிம் விரோத திரைப்படம் அவற்றை மறைக்க அல்லது நியாப்படுத்த உருவாக்கப்பட்டதாகவே தெரிகிறது.

*மலர் விழி*

19 comments:

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

SALAM,

முஸ்லிம்கள் இனி எதில் கவனம் செலுத்தவேண்டும்-கருத்துகணிப்பு:
இஸ்லாமிய சகோதர சகோதரிகளே நாம் இனிவரும் காலங்களில் எதிர்வரக்கூடிய பிரச்சனைகளை எதிர்கொள்ள சரியான வழிகாட்டுதலுடன் தான் முன் செல்கிறோமா?உங்களின் கருத்துகளை அவசியம் பதிந்து நம் சமுகத்திற்கு நேரான வழியில் செல்ல உதவுங்கள்.

கருத்துக்களை இக்கட்டுரையில் பதியவும்:http://tvpmuslim.blogspot.in/2013/01/muslimkal-ethil-kavanam-seluththavendum-tamil-survey.html

அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் said...

சாதி ,சமயம்,மதம் என்ற போர்வையில் நாட்டை அழித்துக் கொண்டு இருக்கும் மதவாதிகளை வெளிச்சம்போட்டு காட்டுவதில் தவறில்லை ,நாம் அனைவரும் சகோதரர்கள் எனற உணர்வில் இருந்தாலும் ,முஸ்லிம் எனற மதவாதிகளும் இந்துத்துவா என்ற மதவாதிகளும் மத வெறிபிடித்தவர்கள என்பது உலகமே அறியும் .அதே நேரத்தில் இன்று உலகத்தில் தீவிரவாதி களும்,கடத்தல்காரர்களும் ,நக்சல் பார்ட்டிகளும்,எந்த மதத்தில் அதிகம் உள்ளார்கள் என்று பார்ப்போமானால் முஸ்லிம்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ,இதை நடிகர் கமலதாசன் துணிச்சலுடன் படம் எடுத்து காட்டுவதில் தவறில்லை ,விஸ்வருபம் படத்தை பார்த்தாவது மக்கள் திருந்தினால் நல்லதுதான் .தங்களுடைய தவறை காட்டிவிட்டால் தாங்கள் குற்றவாளிகள் என்பது மக்களுக்கு தெரிந்துவிடும் என்ற பயத்தில் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு உளார்கள்.உலக குற்றவாளிகளில் முதல் இடத்தில் இருப்பவர்கள் முஸ்லிம் மதத்தை சார்ந்தவர்கள் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும்.அவர்கள் தவறு செய்யாமல் ,மனிதனாக வாழ பழகிக் கொண்டால் நாடே நலம் பெரும் .எல்லோரும் ஓர்குலம் எல்லோருக்கும் ஒரே இறைவன் என்பதை அறியாத இந்த மதவாதிகள் குருடன் யானையைக் கண்ட காட்சிபோல் அலைந்து அழிந்து கொண்டு உள்ளார்கள் .இவர்கள் எல்லாம் எப்போது திருந்துவார்கள் இவர்களை நினைத்தால் பரிதாபமாகவும் வேதனையாகவும் உள்ளது.மனம் திருந்துங்கள் மனிதனாக வாழுங்கள்.

அன்புடன் ஆண்மநேயன்.--கதிர்வேலு.

Unknown said...

கமல் படம் எடுத்ததில் தப்பே இல்லை. கடவுளால் வந்த மதம் என்றால் கடவுளே காப்பாற்றட்டுமே அந்த மதத்தை

Akbar said...

http://www.valaiyugam.com/2013/01/blog-post_23.html
இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் தான் என்கிற காட்சி படிமங்களை மிக அழுத்தமாக பதியவைத்து இறுதியில் அமெரிக்கா செய்வது நியாயம் தான் என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன் என்பது போல் விடை பெறுவார்.
என்கிற சாதுரிய நரித்தனம் விஸ்வரூபமாக வெளிவர இருக்கிறது. இம்முறை அனுமதிக்க மாட்டோம். இம்முறை கமலின் முகத்(சினிமாத்)திரை கிழியும்.

மனிதநேயம் விருப்பி said...

//உலகத்தில் தீவிரவாதிகளும்,கடத்தல்காரர்களும் ,நக்சல் பார்ட்டிகளும்,எந்த மதத்தில் அதிகம் உள்ளார்கள் என்று பார்ப்போமானால் முஸ்லிம்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை//

யோக்கியர் நடுநிலைமைவாதி மாதிரி கருத்து சொல்லும் கருத்து கதிர்வேலு ஐயா,உங்கள் நச்சு கருத்து உங்களை ஹிந்துத்துவா பயங்கரவாதி என்பதை தெளிவா அடையாளம் காட்டுகிறது. உலகத்தில் கடத்தல்காரர்களில் அதிகம் முஸ்லிம்கள் என்று ஒரு வாதத்தை வைத்தீர்கள் அதை எந்த அடிப்படையில் சொன்னீர்களோ அந்த கடவுளுக்குத்தான் வெளிச்சம், ஆர்.எஸ்.எஸ். காரன் கூட இப்படி குதர்க்கமா, கொடூரமா, வெறுப்பை உமிழும் உண்மைக்கு புறம்பான ஒரு கருத்தை சொல்லி இருக்க மாட்டான். இது நடுநிலையுள்ள அனைவரும், உலகம் தெரிந்த அனைவரும் அறிந்த உண்மை. உலகில் கடத்தல்காரர்கள் யார்? அவர்களில் முஸ்லிம்கள்தான் அதிகம் என்ற உங்கள் கருத்தை நீங்கள் நிருபிக்க வேண்டும்.

அடுத்து நக்சல் பார்ட்டியில் முஸ்லிம்கள்தான் அதிகம் என்று ஒரு குற்றசாட்டை சொல்லி நீங்கள் எவ்வளவு கேவலமானவர் என்று புரூப் பண்ணிடீங்க சார்.. மாபெரும் அவதூறை பொது தளத்தில் சொல்கிறோமே என்கிற கூட்ச்ச நாச்சம் இல்லையா.. நக்சல் பாரிகள் கடவுள் மறுப்பு கொள்கையை உடையவர்கள்,. அவர்களில் முஸ்லிம்களுக்கு எங்கே இடம் உண்டு?. இஸ்லாத்தை தூக்கி எரிந்து விட்டு போனால் மட்டுமே நக்சல் பாரிகள் இயக்கத்தில் இடம் கொடுப்பார்கள்.. சரி நக்சல் பாரி தலைவர்களில் தொண்டர்களில், முஸ்லிம் பெயர்களை சொல்லுங்கள். ரஷ்யா தொடங்கி சீனா, நேப்பால், இந்தியா என்று அப்படியே சொல்லுங்கள் பார்ப்போம்.

அடுத்து தீவிரவாதத்திற்கு வருவோம்! ஆப்கானிஸ்தானில் தங்கள் சொந்த நாட்டை பாதுகாக்க போரிட்டால் அவர்கள் தீவிரவாதிகள், பாலஸ்தீனில் அவர்கள் தங்கள் சொந்த மண்ணை பாதுகாக்க போரிட்டால் தீவிரவாதம், முஸ்லிமாக நாடுகளில் திட்டமிட்டு யார் கூலிப்படைகளை வைத்து குண்டுவெடிப்புகளை நடத்துகிறார்கள் அதன் பின்னணியில் இருந்து செயல்படும் மொசாத் போன்ற உளவு அமைப்புகளும், பெட்ரோலை அபகரிக்க வெளிநாடுகள் நடத்தும் பல்வேறு அரசியல் குறித்தும் நடுநிலையாளர்களுக்கு புரியும். அதுவெல்லாம் ஒரு பாக்கம் இருக்கட்டும் தீவிரவாதி எல்லா மதத்திலும்தான் இருக்கிறான். அது முஸ்லிம்கள் என்று வரும் பொழுது ஏன் அவர்களை முஸ்லிம் தீவிரவாதிகள் என்று சொல்கிறீர்கள். நீங்கள் செய்யும் தவறுக்கு இந்து மதம் பொறுப்பாகுமா? ஏன் உங்கள் பத்திரிக்கைகள் இந்து தீவிரவாதி என்று எழுதுவது இல்லை. ஒரு முஸ்லிம் கூட இந்துக்களை இழிவுபடுத்தி படம் எடுக்க வில்லையே ஆர்.எஸ்.எஸ்.மற்றும் இயக்கங்கள் செய்யும் தீவிரவாதத்தை எந்த முஸ்லிமும் இந்துகள் செய்ததாக இந்து தீவிரவாதம் என்று சொல்ல வில்லையே.

தீவிரவாதத்திற்கு மதமோ, இனமோ, மொழியோ கிடையாது அதை எந்த மதத்துடனும், மொழி உடனும், இனத்துடனும் இணக்க முடியாது. அப்படி இணைத்து எழுதுபவன், நினைப்பவன் உண்மைய்லியே நடுநிலைவாதி இல்லை. அவன் வேறு ஒரு தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவானாக இருக்க வேண்டும் இல்லை அந்த இயக்கத்தை மனதளவில் ஆதரிக்க வேண்டும். இப்பொழுது நீங்களும் கமலும் அதையே செய்கிறீர்கள்.

மனிதநேயம் விருப்பி said...

ஹிந்துத்துவா பயங்கரவாதம் என்பது இந்துக்களை குறிப்பதில்லை, அது ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்க பரிவாருக்கு இந்துக்கள் வைத்த பெயரே.

அது போல் அல்கொய்தா, லஸ்கர்ரே இப்படி வழக்கமா சொல்றதை சொல்ல வேண்டியதுதானே.அதை விட்டு மொத்த முஸ்லிம்களையும் குற்றப்படுத்தும் உங்களை போன்றோரை இனியும் அனுமதிக்க முடியாது. உங்களை போன்ற உண்மையான தீவிரவாதிகள் மீது முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வலையுகம் said...

செ.கதிர்வேலு

முதுகெலும்பில்லா மண்புழு போலி மனிதாபிமானி அவர்களே சொல்வதை கூட நேர்மையாக சொல்லத் தெரியவில்லை ஆண்மாவில் இவ்வளவு வஞ்சத்தையும் குரோதத்தையும் சுமந்துக் கொண்டு துர்வடை வீச கருத்து எழுதும் நீர் ஆண்மநேயனா??

..புனிதப்போராளி said...

ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நல்லுள்ளம் கொண்ட நன்மக்களின் மீது உண்டாவட்டுமாக..,,வயது முதிர்ந்த பெரியவர் கதிர்வேலு ஐயா சமுகப்போருப்போடு உங்களின் கருத்துக்கள் அமையனும் காவிக்கைக்கூலிகள் போல் அமைந்திருக்கின்றது சொந்த மண்ணில் அகதிகளாக மாற்றப்படும் பொழுது வேறு வழியில்லாமல் ஆயுதம் ஏந்தும் நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர் அதற்குப் பெயர் தீவிரவாதம் என்றால் வல்லாதிக்க நாடுகள் கதிர்வேலு ஐயாவையும் உங்களின் குடும்பத்தினரையும் படுகொலை பண்ணிவிட்டால் உங்களை சார்ந்தவர்களின் நிலைபாடு என்னவாக இருக்கும்,,..ஒவ்வொரு மனிதனும் இழப்புகள் தனக்கு வரும்போதுதான் அதன்வலியை உணர்கின்றான்../ தன்னுயிர்க்காகவும் தன்னாட்டுமக்களுக்காகவும் ஆயுதம் ஏந்தியவன் போராளியாக ரானுவவிரனாக ஏன் பாதிக்கப்பட்டவர்கள் கருதக்கூடாது.., பன்முக சமுதாயம் வாழும் இந்தியாவில் மிடியா பயங்கிரவாதிகளால் முஸ்லிம்கள் மட்டும்தான் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றனர் முஸ்லிம்கள் கொட்டக்கொட்ட குனிந்துகொண்டு இருக்கின்றார்கள் என்பதினால்தான்.., கொட்டக்கொட்ட குனிபவன் முட்டாள் எனபது இஸ்லாமியர்களுக்கு தெரியாமலில்லை திருப்பி கொட்ட நினைத்தால்..............,,,,,,,, பொருமைக்கும் எல்லை உண்டு........,,,,,,,,by ..புனிதப்போராளி

Unknown said...

நன்றி சிந்திக்கவும் இணையதளத்திற்கு!!!உண்மையை உண்மையாகவே சொல்லியுள்ளீர்கள்,,,,பலவிதமான மூலை மழுங்கிப்போன மனிதர்கள் மத்தியில் ,,,,உதாரனத்திற்க்கு - நானும் நடு நிலைவாதிதான் என்று சொல்லிக்கொள்ளும் கயவர் கதிர்வேலு அவர்களைப்போல் நானும் கருத்து சொல்கிறேன் என்று தன்னுடைய காவி கொள்கையின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றி தனக்கே கேவலத்தை உண்டு செய்து கொண்டுள்ளார் .....

Anonymous said...

ஆப்கானிஸ்தான் முஸ்லிமா பத்தி பேசுனா , இங்க இருக்குறவனுக்கு என்ன ? இந்தியாவுல இருக்குறவன் இந்தியன். இவனுக்கும் அவனுக்கும் என்ன தொடர்பு ? இவன் ஏன் கடுப்பு ஆவுறான் ?

5000 வருஷமா ஹிந்து மதம் இருக்கு. 1500 வருஷத்துக்கு முனால வந்த முஸ்லிம் எப்படி இவ்வளோ பெரிய மதமா மாறிச்சி ?

Anonymous said...

விஸ்வரூபம் படத்தை கமல்ஹாசன் எடுத்தது" அந்த படத்தை DTH யில் வெளியிடுவேன் என்று சொன்னது" அனைத்துமே உள்ள்நோக்கதுடன் செய்ய பட்டது என்று தற்பொழுது அனைவருக்கும் தெரிந்து இருக்கும்.இந்த படத்தை நாம் திரையில் வெளியிட்டால் கண்டிப்பாக இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அதனால் கண்டிப்பாக படம் தடைப்படும். என்று முதலிலேயே கமலகாசனுக்கு தெரிந்து உள்ளது. அதனால் தான் படத்தை ஒரு நாள் முன்பாகவே DTH யில் வெளியிட முயற்சி செய்தார். அவருக்கு தேவை இந்த படத்தினுடைய நச்சிதன்மை வாய்ந்த கருத்தை மக்கள் பார்த்து விடவேண்டும். என்ற உள்நோக்கத்துடன் தான் அணைத்து காயையும் கமல்ஹாசன் நகர்த்தினார் அதில் தோல்வியும் பெற்றார்.

Anonymous said...

ஜனவரி 11-ம் தேதி படம் வெளியிடப்படும் என்ற அறிவிப்பு வெளியான நேரத்தில், 24 முஸ் லிம் அமைப்புகள் மற்றும் கட்சிகளின் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் ஆழ்வார்பேட்டையில் உள்ள ராஜ்கமல் அலுவலகத்தில் கமலை சந்தித்தனர். வெளிநாடுகளில் விநியோகஸ்தராக இருக்கும் முஸ்லிம் ஒருவர்தான் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். அப்போது சுமுகமாகப் பேச்சுவார்த்தை நடந்தது. ''முஸ்லிம்களோடு நல்ல நட்புஉணர்வு கொண்டவன் நான். அவர்களைக் கொச்சைப்படுத்தி படம் எடுக்க மாட்டேன்'' என்றார் கமல். ''துப்பாக்கி படக் குழுவினரிடம் எங்களைப்பற்றி கேட்டுப் பாருங்கள். எங்களின் செயல்பாடு பற்றி நீங்கள் வைத்திருக்கும் பிம்பம் உடையும்'' என்று, கமலிடம் சொன்னது முஸ்லிம் கூட்டமைப்பு. இறுதியாகப் பேசிய கமல், '' 'விஸ்வரூபம்’ இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் அல்ல. இந்து முன்னணியினருக்கு எதிரான படம். ராமகோபாலன் படத்தைப் பார்த்து விட்டு எதிர்ப்பார்'' எனச் சொன்னார். பேச்சு வார்த்தையின் இறுதியில், திரைக்கு வருவதற்கு முன் படத்தை போட்டுக்காட்ட ஒப்புக்கொண்டார் கமல்.

'இந்திய வரலாற்றில் இதுபோல் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்தி ஒரு படம் வெளியாகவே இல்லை. குர்-ஆன், தீவிரவாதத்தை போதிக்கும் நூலாகவும் தொழுகை வழிபாடுகள் தீவிரவாதத்துக்கு ஊக்கம் அளிப்பதாகவும் காட்சிகள் சித்திரிக்கப்பட்டுள்ளன. கோவை, மதுரை போன்ற நகரங்கள் எல்லாம் சர்வதேசத் தீவிரவாதிகளின் புகலிடங்கள்போல் காட்டப்பட்டுள்ளன. தமி ழகத்தில் மாமா, மச்சான் உறவுமுறை பேசி சமூக நல்லிணக்கத்துடன் வாழக்கூடிய சூழலை சிதைக்க வல்லது 'விஸ்வரூபம்’ திரைப்படம். 'முற்போக்கு பேசும் வைதீகன் ஆபத்தானவன்’ என்று சொன்ன பெரியாரின் கருத்தை கமல் மூலம் உண்மை என அறிய முடிகிறது'' என்கின்றனர் முஸ்லிம் கூட்ட மைப்பினர்.

Anonymous said...

////முழுமையாக விசுவரூபம் படத்தை தடை செய்ய மத்திய அரசுக்கு தந்தி அடிக்க வேண்டிய முறைகள்///

To

Shri. Susil Kumar Shinde
Union Minister for Home Affairs
North Block, Central Secretariat
NewDelhi – 110001

Ban Screening of Vishwaroopam film in all languages permanently by all means

viz. Theaters, DTH, etc. This film was specially screened to Muslim delegation

by Kamal Haasan in Tamilnadu. This film incites communal hatred among the

citizens. This film will disturb the communal harmony, breach of peace and

public order in India. This film lowers the image of Islam and Muslims.
This Film

branding Muslims as Terrorists and Quran is the Root-Cause of Terrorism. It

shows Muslim Namaaz is the symbol of Terrorist. Consider this as urgent issue to

maintain peace and harmony in our nation.

Date: ……………………….

Place: …………………

Sender: ……………..Name

address with pincode

To

Shri. Salman Kurshith
Union Minister for External Affairs
South Block
NewDelhi – 110001

Ban Screening of Vishwaroopam film in all languages permanently by all means

viz. Theaters, DTH, etc. This film was specially screened to Muslim delegation

by Kamal Haasan in Tamilnadu. This film incites communal hatred among the

citizens. This film will disturb the communal harmony, breach of peace and

public order in India. This film lowers the image of Islam and Muslims. This Film

branding Muslims as Terrorists and Quran is the Root-Cause of Terrorism. It

shows Muslim Namaaz is the symbol of Terrorist. Consider this as urgent issue to

maintain peace and harmony in our nation.

Date: ……………………….

Place: …………………

Sender: ……………..Name

address with pincode

Anonymous said...

////முழுமையாக விசுவரூபம் படத்தை தடை செய்ய மத்திய அரசுக்கு தந்தி அடிக்க வேண்டிய முறைகள்///
To

Shri. Pankaja Kumar
Chief Executive Officer
Central Board of Film Certification
Bharat Bhavan
91-E, Walkeshwar Road
Mumbai – 400006

Ban Screening of Vishwaroopam film in all languages permanently by all means

viz. Theaters, DTH, etc. This film was specially screened to Muslim delegation

by Kamal Haasan in Tamilnadu. This film incites communal hatred among the

citizens. This film will disturb the communal harmony, breach of peace and

public order in India. This film lowers the image of Islam and Muslims. This Film

branding Muslims as Terrorists and Quran is the Root-Cause of Terrorism. It

shows Muslim Namaaz is the symbol of Terrorist. Consider this as urgent issue to

maintain peace and harmony in our nation.

Date: ……………………….

Place: …………………

Sender: ……………..Name

address with pincode

To

Shri. Manish Tewari
Union Minister for Information and Broadcasting
Sasthri Bhawan

மற்றும் FAX ADDRESS

Shri. Manish Tewari
Union Minister for Information and Broadcasting
Sasthri Bhawan
NewDelhi – 110001

Email: mib.nib@nic.in

0 11 23384782, 23394340 (Tel. Off.)
011 23782118 (Fax)
0 11 24644627, 24644628 (Tel. Res.)
0 11 24658384 (Fax)

----------------------------

Shri. Susil Kumar Shinde
Union Minister for Home Affairs
North Block, Central Secretariat
NewDelhi – 110001

Email: websitemhaweb@nic.in

Phone: 011 23092161, 23092011
Fax: 011 23093750, 23092763

----------------------------

Shri. Salman Kurshith
Union Minister for External Affairs
South Block
NewDelhi – 110001

Email: eam@mea.gov.in

011 23011127, 23011165 (Tel. Off.)
011 23013254, 23011463 (Fax)
011 23793191, 23793192 (Tel. Res.)

----------------------------

Smt. Pankaja Thakur
Chief Executive Officer
Central Board of Film Certification
Bharat Bhavan
91-E Walkeshwar Road,
Mumbai 400 006

Email : ceo.cbfc@nic.in

Tel No. 022 2363 1048
Fax No: 022 2369 0083

The Prime Minister’s Office
South Block, Raisina Hill,
New Delhi,
India-110 101.
Telephone: 91-11-23012312.
Fax: 91-11-23019545 / 91-11-23016857

Smt. Sonia Gandhi
10, Janpath
New Delhi.
Tel. (O) : 23792263, 23019080
Tel. (R) : 23014161, 23014481
Fax : 23018651

Mamata Banerjee
C-4, M.S. Flats, B.K.S. Marg,New Delhi-110 001
Phone 011-23722975,011-23381213,011-23386645,033-24753000
Fax 011-23319555,011-23387333,033-24540880
Mulayam
16, Ashoka Road,New Delhi – 110 001
011-23736300,0522-2235477
Lalu
25, Tughlak Road,New Delhi -110 011
Phone 0612-2203067
Supreme Court
The Chief Justice,
Supreme Court of India,
Tilag Mark, New Delhi,
Email: supremcourt@nc.in

Madras High Court
The Chief Justice
Madras high Court
Parry, Gerogh Town, Chennai

Anonymous said...

விஸ்வரூபம் முழு திரைப்படத்தையும் பார்க்க கீழ்க்கண்ட இணையதளத்திற்கு செல்லுங்கள்.

(Full movies)

http://www.yarlminnal.com/?p=26589

பாருங்கள் பரப்புங்கள்! விஸ்வரூபம் திரைப்படம்!

ruban said...

சரி ஒதுக்கலாம், கமலின் மகளை கமலோடு சேர்த்து வைத்து பேசிய இந்த மத வெறி தலைவர்களை என்ன செய்வது சொல்லுங்கள்... அந்த தலிவர்கள் படிக்கும் குரானில் அப்டியா சொல்லி இருக்கிறது, முதலில் படத்தை படமா பாருங்கள் முட்டாள்களே,
இவளவதுகும் காரணம் என்ன மதம் தான் காரணம்,,, ஒருத்தன் சொல்ல முடியுமா கடவுள் இருக்கிறான் என்று, அப்டி இருக்கிறான் என்டால், உலகில் நாடாகும் கற்பழிப்பு, கொடூர கொலைகள் , திருட்டு, பரிதாப சாவுகள், குடுவெடிப்பு இதுபோண்ட விஷயம் எல்லாம் நாடாகும் போது மத வெறியர்களே சொல்லுங்கள் உன் ___ கடவுள் எங்கே போய் இருதான், யண்ட இல்லாத ஒன்ன நெனச்சு அடிபோடு சாவிரிங்க, இருக்கிற ஒரு வாழ்கைய நல்ல வாழுங்க, இந்துகளின் மதவாதம், இந்திய முழுவதுமாக, முஸ்லிம் & கிரிஸ்துவர் மதவாதம் உலகம் முழுவதுமாக இந்த மதவாதத்தின் முழு நோக்கம், மதத்தை பரப்புவது தான் இதை முதலில் உன்னர்து கொள்ளுங்கள், மனிதனாய் இருங்கள்... அன்பை இருங்கள் இதை விட பெரியது எதுவும் இல்லை, மனிதனை மனிதனாய் பாருங்கள்... இந்த ஜாதி, மதம், கடவுள் எல்லாம் மனிதன் தான் உருவாக்கினான்.