![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhSiwkUTDsUxE9MKJ9XUe-uTFPwcva0nJ31KeNphyphenhyphenz3VpBqK6Kqhf2CIWwON5L0biQuGdAzJvGLcA20U1ynEpnwRV4RduCPwDFdkTomsOcsUsojOca-UbeZ1lnkTVLHscoLAYwmth27wFyF/s200/sinthikkavum.net.jpg)
மாவீரர் நாள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்துக்குள் புகுந்த சிங்கள காவல்துறையினர் அங்கிருந்த தமிழ் மாணவர்களை கண்மூடித்தனமாகத் தாக்கியது. இதில் மாணவர்கள் பலர் படுகாயம் அடைந்தனர்.
அதுமட்டுமின்றி பத்துக்கும் மேற்பட்டவர்களைப் பிடித்துச் சென்றிருக்கிறது. அவர்கள் மீது பயங்கரவாதச் சட்டத்தின்கீழ் வழக்கு பதியப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அவர்கள் இருக்கும் இடமும் வெளியில் அறிவிக்கப்படவில்லை. இதனால் வெகுண்டெழுந்த தமிழ் மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பிறகு இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம் நடந்ததில்லை என்ற அளவுக்கு மக்கள் அதில் பங்கேற்றுள்ளனர். அதைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் நகருக்குள் தமிழர்களை வீடு புகுந்து வேட்டையாடும் நடவடிக்கையில் சிங்கள காவல்துறை இறங்கியுள்ளது. நேற்று முன்தினம் 25க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிங்கள காவல்துறையால் பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இராஜபக்சேவின் போர்க்குற்றங்கள் ஒவ்வொரு நாளும் அம்பலப்பட்டு வரும் நிலையில், சர்வதேச நாடுகளின் அழுத்தம் அதிகரித்து வருகிறது. சர்வதேச நாடுகள் ஆயுதம் இன்றி ஒரு உள்நாட்டு புரட்சியை ஏற்ப்படுத்தி சிரியா போன்று பன்னாட்டு படைகளை மக்களுக்கு ஆதரவாக அனுப்பி ராஜபக்சேவுக்கு முடிவு கேட்டலாம் என்று அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.
3 comments:
அப்படி ஏதாவது நல்லது நடந்தால் சரி.
மட்டக்களப்பு ஏறாவூர் சதாம் ஹுசைன் கிராமத்தில் 12 ஆம் திகதி, ஆகஸ்ட் மாதம் 1990 ஆம் கொலை வெறியுடன் பாய்ந்த புலி பயங்கரவாதிகள் 116 முஸ்லிம்களை சுட்டும், வெட்டியும் திட்டமிட்டு படுகொலை செய்தனர். புலிகளின் இந்த கொலைவெறி பிடித்த தாக்குதலில் 60 முஸ்லிம் குழந்தைகள் மரணத்தை சுவாசித்தனர். மானிட குலத்திற்கு எதிராக புலிப் பயங்கரவாதிகள் புரிந்த போர்க்குற்றத்திற்கு இதனையும்விட ஆதாரங்கள் வேண்டுமா..?? இதோ புலிகளின் கொலைவெறிக்கு பலியான குழந்தைகளின் பெயர் வயது மற்றும் விபரங்கள்
1- ஏ. அப்துல் மஜீத் -(1 வாரம்)-ஆண்
2- ஏ. எல். அன்சாரா -(1 மாதம்)- பெண்
3- எம். ஐ. எம். சானாஸ்- (05 மாதம்)- பெண்
4- ஏ. எஸ். பைரூஸ் -(8 மாதம்)- ஆண்
5- எம். ஐ. பர்சான் -(01 வயது)- ஆண்
6- எஸ். சனூஸியா- (01 வயது)-பெண்
7- ஏ. றிபாகா -(01 வயது) -பெண்
8- எச். எம். பஸ்மி -(03 வயது) -ஆண்
9- எம். வை. எம். பசீர் -(03 வயது)- ஆண்
10- யூ. லாபிர் -(03 வயது)- ஆண்
11- எம். ஐ. பர்சானா -(02 வயது)- பெண்
12- ஆர். எப். றம்சியா -(06 வயது)- பெண்
13- எம். எஸ். றம்சுலா- (07 வயது)- பெண்
14- எம். எஸ். சஹீலா- (04 வயது)- பெண்
15- எஸ். எல் நஜீபா -(04 வயது) பெண்
16- எஸ். எல். நஸ்ரின்- (06 வயது) பெண்
17- எம். ஐ. சபீரா -(06 வயது)- பெண்
18- எம். ஐ. எம். தாஹிர்-(06 வயது)- ஆண்
19- எம். எல். எப். றிஸ்னா-(05 வயது)- பெண்
20- எச். எம். ஹிதாயா- (08 வயது)- பெண்
21- எம். எஸ். எம்.அக்ரம்-(6 வயது )
22- எம். எஸ். எம். தல்ஹான்- (08 வயது)
23- எஸ். ஏ. எம். இம்தியாஸ்- (09 வயது)
24- ஆர். எம். சித்தீக் -(8 வயது)- ஆண்
25- ஆர். எப். றம்சியா -(6 வயது)- பெண்
26- எம். சீ. எம். றிஸ்வான் -(10 வயது)
27- எம். ஐ. ஜரூன் -(10 வயது)
28- எஸ். செய்யது அஜ்மல் -(10 வயது)
29- எம். ஐ. அஸ்றப் -(11 வயது)
30- எம். ஐ. எம். ஆரிப் -(12 வயது)
31- எம். கமர்தீன் -(12 வயது)
32- எம். ஐ. எம். அஜ்மல்- (12 வயது)
33- ஏ. எல். மக்கீன்-(12 வயது)
34- எம். எஸ். எம். பௌசர் -(12 வயது)
35- ஏ. எல். அபுல்ஹசன்- (12 வயது)
36- வை. எல். எம். ஹரீஸ்- (12 வயது)
37- எம். எஸ். எம். ஜவாத்- (13 வயது)
38- எம். எஸ். பைசல்-(13 வயது)
39- எம். பீ ஜவாத்- (13 வயது)
40- யூ. எல். எம். அனஸ்- (13 வயது)
41- ஏ. எல் அப்துல் சமத்-(14 வயது)
42- எச். எம். பௌசர்-(14 வயது)
43- ஏ. ஜௌபர்- (14 வயது)
44- எம். எஸ். எம் சகூர் -(14 வயது)
45- ஏ. சமீம்- (14 வயது)
46- எம். இஸ்ஸதீன்- (15 வயது)
47- எம். எம். எம். பைசல் -(15 வயது)
48- எம். எஸ். ஜிப்ரியா -(12 வயது) பெண்
49- எம். எஸ். றமீஸா-(10 வயது)-பெண்
50- எம். பீ. சரீனா-(14 வயது)- பெண்
51- எம். பீ. ஹபீபா- (12 வயது)- பெண்
52- எஸ். எம். அஸ்மி -(11 வயது)-ஆண்
53- எம். எல். சமீமா-(10 வயது)- பெண்
54- எம். எஸ். ஐதுரூஸ் -(11 வயது) ஆண்
55- எல். நயிமுதீன் -(12 வயது)- ஆண்
56- ஏ. எல். பாத்தும்மா-(10 வயது)-பெண்
57- ஜே. எம். நௌபர்-(11 வயது ) -ஆண்
58- யூ. எல். ஏ. சதார்- (13 வயது)- ஆண்
59- ஆர். ஹிதாயா-(10 வயது)- பெண்
60- ஏ. எல் சமீர்-(10 வயது) -ஆண்
///மட்டக்களப்பு ஏறாவூர் சதாம் ஹுசைன் கிராமத்தில் 12 ஆம் திகதி, ஆகஸ்ட் மாதம் 1990 ஆம் கொலை வெறியுடன் பாய்ந்த புலி பயங்கரவாதிகள் 116 முஸ்லிம்களை சுட்டும், வெட்டியும் திட்டமிட்டு படுகொலை செய்தனர். புலிகளின் இந்த கொலைவெறி பிடித்த தாக்குதலில் 60 முஸ்லிம் குழந்தைகள் மரணத்தை சுவாசித்தனர்///
அவர்கள் 116 கொன்றார்கள் என்றால் அதற்காக ஒன்றரை இலட்சம் மக்களை கொன்று குவித்த ராஜபக்சேவை ஆதரிப்பீர்கள். ராஜபக்சேவை எதிர்த்து போராட்டங்கள் நடத்த கூடாது பதிவுகள் இடக்கூடாது இதுவெல்லாம் எந்த விதத்தில் நியாயம்.
இதுவெல்லாம் உங்கள் அறிவு முதிர்ச்சியின் அவலத்தை காட்டுகிறது. எந்த கருத்தையும் சொன்னாலும் பெயரோடு சொல்லுங்கள். எல்லா பதிவிலும் காப்பி பேஸ்ட் செய்து போடுவதால் எந்த நன்மையையும் இல்லை.
நீங்கள் முஸ்லிம்களுக்கு அதரவாக இந்த கருத்தை போடுவதாக உங்கள் கருத்தை வைத்து விளங்கி கொள்ள முடிகிறது. ஆனால் உங்கள் முஸ்லிம் இயக்கங்களும் மக்களும் ராஜபக்சேவுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறார்கள். உங்களது கருத்து அதற்க்கு மாற்றமாக இருக்கிறது.
புலிகள் இருந்தவரைதான் சிங்கள, பவுத்த பேரினவாதம் உங்களை ஒன்றும் செய்யாமல் விட்டு வந்தது. இனி இலங்கையின் அடுத்த இலக்கு நீங்கள்தான்.இப்பொழுது எப்படியெல்லாம் இலங்கை முஸ்லிம்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை செய்திகளை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இப்படி பட்ட ஒரு சூழலிலும் நீங்கள் இப்படி ஒரு கருத்தை எழுதிவருவது உங்களது அறியாமையே காட்டுகிறது. உங்களது கருத்துக்களுக்கு பதில் சொல்வதற்காக ஒரு கருத்து மட்டும் விட்டு வைக்கப்பட்டுள்ளது. மற்றவை நீக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் அனைத்து பதிவிலும் ஒரே கருத்தை காப்பி செய்து போடுவது அவசியமற்றது.
மேற்கொண்டு உங்களுக்கு விளக்கம் தேவை என்றால் நீங்கள் எங்களோடு தொடர்பு கொள்ளலாம். puthiyathenral@gmail.com
தமிழில் ஒரு பல மொழி சொல்வார்கள் பூடம் தெரியாமல் சாமி ஆடுகிறான் என்று அதற்க்கு உங்களை தவிர பொருத்தமான ஆள் வேறு யாரும் இருக்க முடியாது.
Post a Comment