Dec 08: பெங்களூர்:காங்கிரஸ்,மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளை விட பா.ஜ.க மிகவும் ஆபத்தானது என்று அக்கட்சியில் விலகிய முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா கூறினார்.
மேலும் பா.ஜ.கவுக்கு ஒருபோதும் திரும்பச் செல்லமாட்டேன், “பா.ஜ.கவின் தத்துவ ஹிந்துத்துவா சிந்தனையில் இருந்து நான் அகன்றுவிட்டேன். மகாத்மா காந்தி, அம்பேத்கர், ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோரின் சிந்தனைகளின் மீதே தற்போது எனக்கு நம்பிக்கை உள்ளது.
பா.ஜ.கவுக்காக நான் அனைத்தையும் இழந்தேன். பா.ஜ.க, தென்னிந்தியாவில் ஆட்சியை பிடிக்காது என்று கூறப்பட்ட வேளையில் நான் தான் அக்கட்சியை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினேன். 55 எம்.எல்.ஏக்களும், 12 அமைச்சர்களும் எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்கள் மீது முதல்வர் ஜகதீஷ் ஷெட்டார் நடவடிக்கை எடுத்துப் பார்க்கட்டும்.” என்று சவால் விட்டார் எடியூரப்பா.
சிந்திக்கவும்: இது ஒரு நல்ல மனமாற்றம்தான், இவரை போல் மனம் திருந்தி ஆர்.எஸ்.எஸ். கேடர்கள் பலர் ஆர்.எஸ்.எஸ இயக்கத்தை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். அதில் பலர் கொல்லப்பட்டும் உள்ளனர். சமீபத்தில் தொடர் குண்டு வெடிப்புகளில் சம்மந்தப்பட்ட சுவாமி அசிமானந்தா மனம்மாறி உண்மைகளை கூறினார். இந்தியாவில் அமைதி நிலவ இதுபோன்ற நல்ல மனமாற்றங்கள் உதவுகின்றது என்கிற போது இது எல்லோராலும் வரவேற்கப்படும் என்பதில் ஐயம் இல்லை.
2 comments:
nalla thakaval...
சீ சீ இந்த பழம் புளிககும் என்பது போல் உள்ளது.
Post a Comment